Wednesday, 13 February 2013

வேண்டாம் மரண தண்டனை,வேண்டும் பிரம்படிகள்-வினோதினி ஆசிட் வீச்சு + பாலியல் வன்கொடுமைகள்

வினோதினி காரைக்காலை சேர்ந்த பி.டெக் படித்த அழகான இளம்பெண்.அதே கல்லூரியை சேர்ந்த சீனியர் மாணவர் சுரேஷ்,வினோதினியை ஒருதலையாய் காதலித்து வந்தார்.காதலை மறுத்ததற்காக தன் நண்பர்களுடன் சேர்ந்து வினோதினி மீது ஆசிட் வீசினார்.இதில் படுகாயமடைந்த வினோதினி சிகிச்சை பலனின்றி மூச்சுத்திணறல் ஏற்பட்டு  நேற்று உயிரிழந்தார்.

இதுபோன்றவர்களை எப்படி தண்டிப்பது?
இவர்களுக்கெல்லாம் மரண தண்டனை போதுமானதா?
வினோதினியின் தந்தை கூறுகையில்,சுரேஷ்க்கு மரண தண்டனை போதாது.என் மகள் பெற்ற அவஸ்தையை சுரேசும் அனுபவிக்க வேண்டும்.சுரேஷ் மேலும் ஆசிட் ஊற்றி கொல்ல  வேண்டும்.அப்போதுதான் அதன் வலி அவனுக்கு புரியும் என்று கூறி இருக்கிறார்.

மலேசியா,சிங்கப்பூர் போன்ற மேலும் சில நாடுகளில் இதுபோன்ற மிக கொடூரமான குற்றங்களுக்கு பிரம்படிகள் கொடுக்கிறார்கள்.இந்த வழியை நம் நாடும் பின்பற்றினால் நிச்சயம் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது.

பிரம்படிகள் எத்தனை கடுமையான தண்டனை என்பதை மலேசிய நாளிதழான தினக்குரல் வெளியிட்ட பதிவை அவசியம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


தயவுசெய்து இளகிய மனம் உடையவர்கள் இந்த காணொளியை காண வேண்டாம்.

4 Responses to “வேண்டாம் மரண தண்டனை,வேண்டும் பிரம்படிகள்-வினோதினி ஆசிட் வீச்சு + பாலியல் வன்கொடுமைகள்”

Anonymous said...
13 February 2013 at 18:13

Hello , Suresh is not her senior, he is druggist.


Anonymous said...
13 February 2013 at 20:38

எந்த கல்லூரியில் இந்த சுரேஷ் இன்ஜினியரிங் படித்தார் நண்பரே!


Mohamed Maricar said...
13 February 2013 at 20:42

ஆமா, இந்த சுரேஷ் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தார் நண்பரே!


kaleel rahman said...
26 June 2013 at 01:52

பிரம்படிதண்டணை மலேசியா சிங்கப்பூர் பேன்ற நாடுகளில் விசா காலம் தாண்டி பயாணிகள் இருந்து விட்டால் ஓவர் ஸ்டே அவர்களுக்குதான் பிரம்படி. உன் மகளோ மணைவியோ உன் தங்கையோ ஆசிட் வீச்சுக்கு ஆளானால் இப்படி ஒரு பதிவு போட்டு மரணதண்டனை கூடாது என்று கூறு கொலைக்கு கொலைதான் தண்டனை. அது என்ன//அழகான இளம்பெண்// பொது வெளியில் இவ்வாறுதான் மேலே குறிப்பிட்டவர்களை வர்ணிப்பீர்களா சகோ. வேண்டாம் மரண தண்டனை. என்று எவன் கூறினாலும் சட்டப்படி தண்டனைக்குறிய குற்றம் என்று சட்டமியற்ற வேண்டும். சாவக்குடுத்தவன் சொல்லட்டும் வேண்டாம் மரண தண்டனை வேண்டாம் என்று


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News