Sunday, 27 January 2013

விஸ்வரூபம் VS முஸ்லீம் அமைப்புகள் - நியாயம் யார் பக்கம்?

DTH பிரச்சினையின்போது தமிழகத்தின் பெரும்பாலான மீடியாக்கள் கமலுக்கும்,தியேட்டர் உரிமையாளர்களுக்குமான பிரச்சினைகளைத்தான் பெரிதுபடுத்தி பேசி வந்தன.அப்போது எனக்கு தவறாக  தோன்றியது DTH-ன் 1000ரூபாய் கட்டணம் என்பதுதான்.

எல்லோரும் கமல் vs தியேட்டர் உரிமையாளர்கள் விசயத்தை பற்றியே பெரிதாக எழுதுகிறார்களே. நான் மட்டும் இப்படி கட்டணம் பற்றி,மாற்றி எழுதலாமா? நான் நினைப்பது சரிதானா? என எனக்குள் சிறிய சந்தேகம் எழுந்தது.


இறுதியில் நான் நினைத்தது சரியாக அப்படியே நடந்தது:)
சில ஆயிரம் பேர்களே படம் பார்க்க பதிவு செய்திருந்தனர்.

இதெல்லாம் அறிவாளி கமலுக்கு ஏன் தெரியவில்லை என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.


1000ம் ரூபாய் கொடுத்து ஒரு படத்தை பார்க்கும் அளவுக்கு தமிழர்கள் பணக்காரர்களும் அல்ல,ஏமாளிகளும் அல்ல என இதன் மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது.

விஸ்வரூபமும் 1000 ரூபாய் ஏமாளிகளும் பதிவை இங்கு கிளுக்கி பார்க்கலாம்.

கமல் என் பார்வையில்கமலை சின்ன வயசுலேர்ந்தே எனக்கு பிடிக்காது. காரணம் அவரோட லிப் கிஸ்! அப்ப விவரம் அறியாத வயசுங்கிறதாலும், நான் கிராமத்திலிருந்து வந்ததாலும்,லிப் கிஸ்ஸெல்லாம் பெரிய தப்பு மாதிரி அந்த வயசுல எனக்கு தோன்றியது.

ஆனால் ,கமல் நல்ல நடிகன், நல்ல கலைஞன், நடிகனுக்கான அழகான முக அமைப்பை கொண்டவர்.

கமல் சொந்த வாழ்க்கையில நல்லவரா? கெட்டவரான்னு எனக்கு தெரியாது.அது எனக்கு தெரியவும் வேண்டாம்.ஆனால் பல தமிழ் ரசிகர்கள் கமலின் படுக்கையறை வரை எட்டி பார்க்கவே விரும்புகின்றனர்.அந்த விதத்தில் கமல் தோற்றுதான் போயிருக்கிறார்.கமலும் மற்ற திரைத்துறையினரும்.


பெரும்பாலான திரைத்துறையினர்,தமிழ் ரசிகன் என்பவன் ஒரு ஊர் சுற்றி,படிக்காதவன்,கூலி தொழிலாளி,ரவுடி,முட்டாள்,வேலை வெட்டி இல்லாதவன் என்றுதான் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கேற்றாற்போல்தான் கதை களத்தையும் அமைக்கிறார்கள்.படித்தவன்,அறிவாளி,விவரம் அறிந்தவன் தியேட்டருக்கு பெரும்பாலும் போவதில்லை என்பது இவர்களின் கணக்கு.

கமல் இதற்கு விதிவிலக்கு.கமல் தன் ரசிகர்களை,தமிழ்ர்களை மிகவும் அறிவாளியாக நினைக்கிறார்.ஆதலால்தான்  அடிமட்ட தமிழ் சினிமா ரசிகனால் கமலின் படங்களை புரிந்து கொள்ள முடிவதில்லை என்பது என் நினைப்பு.

விஸ்வரூபம் vs முஸ்லீம் அமைப்புகள்.


விஸ்வரூபமும் தவறான புரிதல்களும்

கமல் ஒரு நாத்திகவாதி.கடவுள்,மதம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர்.அப்படிப்பட்டவர் ஒரு மதத்தை புண்படுத்தியிருப்பார் என்பதில் எனக்கு சிறிதும் நம்பிக்கை  இல்லை.

படத்தை பார்த்த முஸ்லீம் அமைப்புகள் தவறாக புரிந்துகொண்டதாகவே கருதுகிறேன்.
அதாவது ஒரு காட்சியில் ஒரு தீவிரவாதி தொழுகை செய்துகொண்டே குண்டை வெடிக்க செய்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

எந்த மதத்தையும் சேராத  ஒரு தீவிரவாதி குல்லா,தாடி வைத்து ஒரு முஸ்லீம் தோற்றத்துடன்,முஸ்லீம் போல நாடகமாடி இந்த செயலை செய்கிறார்..இந்த நாடகத்திற்கும் முஸ்லீம்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதுதான் படத்தின் கருத்து.


பெரும்பாலான முஸ்லீம்களின் ஆழ்மனதில் படிந்து கிடக்கும் தீவிரவாதி என்ற மீடியாக்கள் கொடுத்த வலியை பகடைக்காயாய் மாற்ற சில பல முஸ்லீம் அமைப்புகள் முயற்சிக்கின்றன.(புகழுக்காகவோ,அரசியல் லாபத்திற்காகவோ!)

எது எப்படியோ,இரு பக்கமும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.ஆகையால் ரஜினி சொலவதுபோல் மனம் புண்படும் காட்சி எதுவும் இருந்தால் அதை வெட்டி விட்டு படத்தை வெளியிடுவதே சரி என எனக்கு தோன்றுகிறது.

கமலுக்கு சொந்த வீடு கூட இல்லை என்று சொல்கிறார்கள்.தான் சம்பாதித்த பணம்+கடன் அனைத்தையும் இந்த படத்திற்காக கமல் செலவிட்டுள்ளார்.படமும் சர்வதேச தரத்தில் வந்துள்ளதாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.விரைவில் ஹாலிவுட் படத்தை இயக்கப்போகும் கமல் என்ற நல்ல கலைஞனுக்கு மாலை மரியாதை செய்யாவிடினும் அவரின் மனம் நோக செய்து ஹாலிவுட் பக்கம் அனுப்ப வேண்டாம் என அன்புடன் கேட்கிறேன்.

வாழ்த்துக்கள் கமல் :)


12 Responses to “விஸ்வரூபம் VS முஸ்லீம் அமைப்புகள் - நியாயம் யார் பக்கம்?”

கோவை நேரம் said...
27 January 2013 at 07:58

சரியாக சொல்லி இருக்கீங்க..


Kamalakkannan c said...
27 January 2013 at 08:18

நன்றி கோவை நேரம்:)


சிராஜ் said...
27 January 2013 at 23:50

நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்...


விழித்துக்கொள் said...
28 January 2013 at 07:11

பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
தூய தமிழ் நாட்காட்டி வாங்க
அணுகும் முகவரி :
சின்னப்ப தமிழர்
தமிழம்மா பதிப்பகம் ,
59, முதல் தெரு விநாயகபுரம்,
அரும்பாக்கம் , சென்னை- 600106 .
அலைபேசி - 99411 41894.


Anonymous said...
28 January 2013 at 19:59

எது சரியான வழி. சிறப்பான வழி. வெற்றிகரமான வழி..?
தமிழகத்தில் விஸ்வரூபம் படம் ஓடாது என்று பி.ஜெய்னுலாப்தீன் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் சொல்லிக் கொண்டிருந்தார். ஜெய்னுலாப்தீன் வடிவில் பால்தாக்கரேயைப் பார்த்தேன். இந்த அறிவிப்பும் மிரட்டலும் முட்டாள்தனமானது. கண்டிக்கத்தக்கது. வேடிக்கையானது.

அமைதியை விரும்புகின்ற, கடினமாக உழைக்கின்ற, அப்பாவியான தமிழக முஸ்லிம்கள் மீது சேறும் கல்லும் வாரி இறைத்திருக்கின்றார் கமல் ஹாஸன். கமல் கண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் ஒட்ட நறுக்கப்பட வேண்டும் என்பதிலும் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை. அவருடைய விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்பதிலும் குப்பைத் தொட்டியில் வீசப்பட வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை. இந்திய வரலாற்றிலேயே விஸ்வரூபம் போன்று மோசமான படம் எடுக்கப்பட்டதில்லை. ஒப்புக்கொள்கின்றேன்.

ஆனால் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்வதாக அறிவிப்பதும் அரசாங்கத்தையும் மக்களையும் மிரட்டுவதும் எந்தவகையிலும் சரியானதல்ல. இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு இயைந்ததும் அல்ல. பால் தாக்கரே போன்ற பாசிஸ்டுகள் வேண்டுமானால் அவ்வாறு மிரட்டல் இட்டு காரியத்தைச் சாதித்துக் கொண்டிருக்கலாம். சட்டத்திலிருந்துத் தப்பித்துவிட்டிருக்கலாம். ஆனால் முஸ்லிம்கள் இவ்வாறு நடந்துகொள்வது எந்த வகையிலும் அழகு அல்ல.

வெளிப்படையாக மிரட்டல் விடுத்ததன் மூலமாக பி.ஜே கமல் ஹாஸனைப் போன்றுதான் நடந்துகொண்டிருக்கின்றார். இஸ்லாத்தைக் குறித்தும் தமிழக முஸ்லிம்களைக் குறித்தும் கமலுக்கு இழிவான, கேவலமான கருத்து இருந்தது. தன்னுடைய அந்த இழிவான கருத்தை ஒட்டுமொத்த தமிழக மக்கள் மீது சினிமா பைத்தியங்கொண்ட, அப்பாவியான, அன்பான மக்கள் மீது திணிக்க முற்பட்டார் கமல். பி.ஜேயும் அதே தொனியில்தான் குரல் கொடுத்துள்ளார். இது நல்லதல்ல.

இது நம்முடைய நோக்கத்திற்கே கேடு விளைவிப்பதாகத்தான் முடியும். இப்போது காலம் மாறிவிட்டது. ஆட்டத்திற்கான விதிகளும் நெறிகளும் மாறிவிட்டன என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பால்தாக்கரேயாலேயே ஷாரூக்கானின் ‘மை நேம் இஸ் கான்: ஐயம் நாட் எ டெரரிஸ்ட்‘ படத்தைத் தடை செய்ய முடியவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இது போன்ற தாக்கரே தனமான மிரட்டல்கள் இந்தக் காலத்தில் உதவாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இது போன்ற மிரட்டல்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்திற்குத்தான் உதவும். கமல்ஹாஸனுக்குத்தான் உதவும். பி.ஜே.யின் இந்த மிரட்டலிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ளுமாறு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பைக் கேட்டுக்கொள்கின்றேன்.

கமலுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து நீண்ட, நீண்ட, நீண்ட சட்டப் போரில் அவரை இழுத்து அடிப்பதுதான் சரியான வழிமுறையாக இருக்கும். நீதிமன்றமாக அலைய விடுங்கள். ஆற்றல் அனைத்தையும் உறிஞ்சி விடுங்கள். நிச்சயமாக அவர் மண்டியிடுவார். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எதனையும் செய்வார். இன்றைய நீதிமன்ற அமைப்பு இருக்கின்ற நிலையில் இதெல்லாம் சாத்தியமா என நீங்கள் கேட்கலாம். அந்த வெறிபிடித்தவன் சட்டச் சிக்கல்களிலிருந்து மிக இலாகவமாக தப்பித்து வந்துவிட மாட்டானா, என்றும் நீங்கள் கேட்கலாம். சரிதான். அந்த வாய்ப்பும் இருக்கின்றதுதான். என்றாலும் சட்டரீதியாகத் தீர்வும் நீதியும் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கின்றது. சட்டரீதியாக இதனை அணுகுவதுதான் சரியான வழிமுறை ஆகும்.


Anonymous said...
28 January 2013 at 19:59

அடுத்ததாக, இஸ்லாத்தின் அமைதித் தூதை எடுத்துரைப்பதற்காக கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், அரங்கக் கூட்டங்கள்,பொதுக்கூட்டங்கள், தேநீர் விருந்து நிகழ்ச்சிகள் போன்றவற்றை அதிக அளவில் நடத்த வேண்டும். கருத்து சுதந்திரத்தின் எல்லைகள் என்ன என்பதைக் குறித்தும் இஸ்லாம் சொல்வதென்னவென்பதைக் குறித்தும் பேச வேண்டும். விஸ்வரூபம் போன்ற கேடுகெட்ட,இழிவான, அருவருப்பான படங்கள் ஏன் தடை செய்யப்பட வேண்டும் என்பதையும் ஆணித்தரமாக, அழுத்தம்திருத்தமாக எடுத்துரைக்கலாம். திரைப்படங்களில் முஸ்லிம்கள் தொடர்ந்து தவறாகச் சித்திரிக்கப்படுவது தொடர்பான நம்முடைய கவலையை,குமுறலை, வேதனையை, கோபத்தை வெளிப்படுத்துவதற்காக அனைத்துவிதமான அமைதியான, ஆக்கப்பூர்வமான,சட்டத்திற்குட்பட்ட வழிமுறைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய மார்க்கம் நம்முடைய செயல்களிலும் அன்றாட வாழ்விலும், நடப்புகளிலும் வெளிப்பட வேண்டும். இனிய மார்க்கத்தின் அன்பான அறவுரைகள் நம்முடைய செயல்பாடுகளில் புலப்பட வேண்டும். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான அவதூறு பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு இது ஒன்றே வழி. ஒன்றைக் கவனித்தீர்களா?முஸ்லிம்களை வில்லன்களாய், தேசத் துரோகிகளாய்,பயங்கரவாதிகளாய்ச் சித்திரித்து எண்ணற்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த கேப்டனும் அர்ஜுனும் போட்டி போட்டுக்கொண்டு கமலை விட அதிகமான எண்ணிக்கையில் இத்தகைய படங்களை எடுத்திருக்கின்றார்கள். ஆனால் அவற்றால் உங்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் நம்முடைய நண்பர்களின் கருத்து மாறிவிட்டதா, என்ன? மக்கள் திரைப்படப் பிம்பங்களைவிட இரத்தமும் சதையுமாய் உயிர்த்துடிப்புள்ள மனிதர்களைப் பார்த்துதான் உங்களையும் என்னையும் பார்த்துத்தான் தாக்கம் பெறுகின்றார்கள்.

சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுடனான நம்முடைய நட்பும் உறவும் நம்முடைய செயல்பாடுகள், நடத்தை,அணுகுமுறை, பழகும்விதம் ஆகியவற்றைப் பொருத்தே அமையுமே தவிர திரைப்படங்களில் தவறாகச் சித்திரிக்கப்படுகின்ற மாயைகளின் அடிப்படையில் அல்ல என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நம்முடைய செயல்பாடுகளும் நடத்தையும் அன்பும் பண்பும் நிறைந்ததாய், நேசமும் பாசமும் மிகுந்ததாய், சத்தியமும் வாய்மையும் ததும்பியதாய் இருக்குமேயானால் எத்தனை கமல்கள் வந்தாலும் எத்தனை கேப்டன்களும் அர்ஜுன்களும் எத்தனை படம் எடுத்தாடினாலும் எத்தனை விஸ்வரூபங்கள் வந்தாலும் உறவையோ நட்பையோ பாதிக்க முடியாது என்பதுதான் உண்மை.இந்த நாள் வரை இஸ்லாத்தை ஏற்றவர்களில் 99 சதவீதத்தினர் நம்முடைய நடத்தையையும் கனிவையும் பார்த்துதான் வந்திருக்கின்றார்கள் என்பதும் உண்மை.
விஸ்வரூபத்தை எதிர்கொள்வதற்கு இதுதான் சரியான வழி. சிறப்பான வழி. வெற்றிகரமான வழி.

-T.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்


Kamalakkannan c said...
28 January 2013 at 21:18

@சிராஜ்
நன்றி:)


Kamalakkannan c said...
28 January 2013 at 21:20

@விழித்துக்கொள்
எல்லார் பக்கத்துலையும் இதேவா ஹஹ நன்றீ:)


Kamalakkannan c said...
28 January 2013 at 21:21

@T.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
ரொம்ப மெனக்கட்டு எழுதியிருக்கீங்க போல:)


Kamalakkannan c said...
28 January 2013 at 21:22

@T.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி:)


Anonymous said...
15 March 2013 at 17:16

போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் -இது கமலுக்கு புதிதல்ல....
படம் அனைவரது எதிர்பார்ப்பும் போல மாபெரும் வெற்றி!!


johann baird said...
29 August 2013 at 07:43

நல்ல நாள்,

நான் ஒரு பதிவு தனியார் பணம் கடன் இருக்கிறேன். நாம் உலகின் எந்த பகுதியில் 30 ஆண்டுகளுக்கு திருப்பி கால காலம் ஒரு வருடத்திற்குள் 3% ஆக குறைந்த மிக குறைந்தபட்ச வருடாந்திர வட்டி விகிதங்கள் உலகெங்கிலும் தமது நிதி நிலையை மேம்படுத்த வேண்டும் மக்கள், நிறுவனங்கள், உதவ கடன் கொடுக்க. நாம் 100,000,000 யூரோ வரை 5,000 யூரோ எல்லைக்குள் கடன் கொடுக்க. நமது கடன்கள், நன்றாக காப்பீடு அதிகபட்ச பாதுகாப்பு எங்கள் priority.Interested நபர் மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று: (calvinkingloanfirm@gmail.com)

கடன் வழங்குகின்றன.


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News