Sunday, 18 November 2012

போடா போடி - Poda Podi Review

போடா போடி - கமா கதைநாயகி வரலெட்சுமி டான்ஸர்.லண்டன் மாடல் பொண்ணு, கூட பழகுறவங்க யாரா இருந்தாலும்... கணவன் கண் முன்னாலையே கட்டி பிடிப்பது,முத்தம் கொடுப்பது அவருக்கு சப்ப மேட்டரு.

ஆனா நம்ம ஹீரோ சிம்பு அப்டி இல்ல
தமிழ்நாட்லேர்ந்து  லண்டன் போனவரு..!!!!  தமிழ் கலாச்சாரம்,பண்பாடு அப்டி இப்டின்னு நிறைய பேசுறாரு.

மெச்சூரிட்டி இல்லாத இந்த ரெண்டு பேரும் லண்டன்ல லவ் பன்றாங்க.சின்னபுள்ளத்தனமா நிறைய சண்ட போடுறாங்க.அப்ரம் கல்யாணம் பன்னிக்கிறாங்க.


நம்ம சிம்பு கல்யாணத்துக்கு பிறகு, நீ மாறனும்,யாரையும் கட்டி பிடிக்க கூடாது,முத்தம் கொடுக்க கூடாது தமிழ் பொண்னா இருக்கனும்னு அடம் பிடிக்கிறாரு.இது நாயகிக்கு பிடிக்கல...கூடவே இருக்குற டான்ஸ் மாஸ்டரான சோபனாவுக்கும் பிடிக்கல...

டான்ஸ் போட்டியில் ஜெயிக்கனும்-கறது வரலெட்சுமியின் லட்சியம்.டான்ஸ் ஆடுறத எப்டியாவது தடுத்து  குடும்ப பெண்ணா அடக்க ஒடுக்கமா வீட்ல ஒக்கார வைக்கிறது கணவனான சிம்புவின் லட்சியம்.

ஒரு காட்சியில

தூங்கி எழுந்த சிம்பு , மனைவி வரலெட்சுமியை பார்த்து...
வா வா வந்து புருசன் காலை தொட்டு கும்பிடு என்கிறார்.வரலெட்சுமியும் தொட்டு கும்பிடுகிறார்.

தமிழ்நாட்டின்  குக்கிராமங்களிலையே இந்த சம்பிரதாயமெல்லாம் போயி பல வருசம் ஆச்சு...ஏன்யா லண்டன்ல பிறந்த பொண்ணு இதெல்லாம் பண்ணுமாய்யா? இதெல்லாம் ஓவரா தெரியல..(ஆணாதிக்கம்)
யாருய்யா அந்த டைரக்டரு..சிம்புவின் லட்சியத்தை அடைய சிம்புவின் சித்தப்பா  ஒரு ஐடியா கொடுக்கிறார்.அது என்னன்னா? குழந்த பொறந்தா பொண்ணு அடங்கிடுமாம்(மாறிடுமாம்:)

அந்த ப்ராஜக்டை ஒப்புக்கொண்ட சிம்பு.அதை செயல்படுத்த நாயகியை பெட்டில் தள்ளி கதவை மூடி காட்சியை வெட்டுகிறார்கள்.

ஒரு சூப்பர் சீன் இருக்கு
மனைவி குழந்தை பிரசவிக்கும் வலியை கணவன் சிம்பு அருகில் இருந்து பார்க்கிறார்.அப்ப ஒரு வசனம் வருது.
எல்லா நாட்டுலயும் மனைவி குழந்தை பிரசவிப்பதை பார்க்க அனுமதி உண்டு.இந்தியாவில் மட்டும் அது இல்லை...அப்டிங்கிறார்..
உண்மையா???

குழந்தையும்  பிறக்குது.தான் டான்ஸ் ஆடுறத நிறுத்தத்தான் இந்த குழந்தை ப்ராஜக்ட் போட்டார்னு வரலெட்சுமிக்கு தெரியவர அதேசமயம் குழந்தையும் விபத்தில் மரணிக்க ...மறுபடியும் சண்டை ஆரம்பம்.


இருவரும் போடா போடி -ன்னு பிரிகிறார்கள்.

 


ஒன்னுல்ல பத்து புள்ள பெக்க முடியும்.அதுக்கு நீவேணும்னு அப்பட்டமாக வரலெட்சுமி வீட்டின் முன் கத்தி கூச்சலி்டுகிறார் சிம்பு.பிறகு சில நிபந்தனைகளோடு வரலெட்சுமியும் வருகிறார்.

கண்டவனோட  நீ ஆடுறது பிடிக்கல என்று சிம்பு சொல்ல..அப்ப நீதான் என்னோட ஆடனும் என்று வரலெட்சுமியிடம் வார்த்தை தவறி வர..அப்படியே இருவரும் ஆடி ஜெயிக்கிறார்கள்.

போட்டியில் ஜெயிச்சிட்டோம்னு பந்தாவா சிம்பு சொல்ல..இது ஃபர்ஸ்ட் ரவுண்டுதான் இன்னும் பதினாலு ரவுண்டு இருக்கு என வரலெட்சுமி சொல்ல...
போடா போடி படம் கமா போட்ட தொடரும் படமாக முடிகிறது.

சிம்பு குள்ளமா இருந்தாலும் பர்சனாலிட்டி ஓகே...தமிழ் கலாச்சாரமெல்லாம் சிம்புவா பேசுறது? சிம்புவின் நிஜத்துக்கு மாறான திரை முகம்:(

வரலெட்சுமி ஹ்ம்...ஹும்  குரலும்  சரியில்ல..முகமும் பிடிக்கல..படத்துக்கேற்ற உடல்வாகு இருக்கு முக அமைப்பு இல்லையே அம்மணி..!!!!

மொத்தத்தில் போடா போடி அடுப்படி:)


நம்ம நடிகைகள் புக் எழுதினா எப்டி இருக்கும்?

சிரித்து மகிழ ஒரு ஜாலியான பதிவு..ஜாலியா வாசித்து பாருங்கள்.
2 Responses to “போடா போடி - Poda Podi Review”

திண்டுக்கல் தனபாலன் said...
18 November 2012 at 08:06

ஹா... ஹா... நல்ல விமர்சனம்...


Bhagyaraj Satyamurty said...
9 September 2016 at 11:14

Bro. Enakku Padam romba pudichadhu. Jolly uh oru cinema thats all.

Maybe En vayasu apdi.


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News