Monday, 12 November 2012

துப்பாக்கி - சுட்டுத்தாக்கு

விஜய் -ன் தீபாவளி துப்பாக்கி

 

துப்பாக்கி திரை விமர்சனம் படிக்க இங்கே கிளுக்கவும்.

தீபாவளிக்கு துப்பாக்கி,போடா போடி,கும்கி, மற்றும் அம்மாவின் கைப்பேசி ஆகிய படங்கள் திரைக்கு வரவிருக்கிறது.

என்னதான் நம்ம விஜய் அண்ணாவ கலாய்ச்சாலும்,விஜய் -க்குன்னு ஒரு தனி இடம் தமிழ் சினிமாவில் இருக்கவே செய்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி ஹாரிஸ் ஜெயராஜ் இசைத்து,விஜய்,காஜல் அகர்வால் நடித்துள்ள இந்த படத்தை வி.கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.


துப்பாக்கி பாடல்கள் சுமார் ரகம்தான்.

படத்தின் கதை என்னவாக இருக்கும்?


படத்தின் தலைப்பே இது ஒரு ஆக்சன்,த்ரில்லர் படம் என சொல்கிறது.

விஜய், மும்பையில் பணியாற்றும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி.ரவுடிக்கு ரவுடி,தீவிரவாதிக்கு தீவிரவாதம் என , சட்டம் செல்லுபடியாகாத ஒரு நகரில் தர்மத்தை  காக்க போராடும் வழக்கமான் ஒரு நாயகன்.

தீவிரவாதத்தை பற்றிய கதையல்ல என இயக்குனர் மறுத்தாலும்.இது மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை அடிப்படையாக கொண்டு அமையப்பெற்ற கதைக்கருவாக இருக்கலாம்.

மொத்தத்தில் விஜய் ரசிகனுக்கான கமர்சியல் படமாக இருக்கும்.

பல பிரச்சினைகளை கடந்து வெளிவரவிருக்கும் இந்த துப்பாக்கி சிறுவர்கள் சுட்டு விளையாடும் கேப் துப்பாக்கியாக இல்லாமல் ஏ.கே 47 ரக  நிஜ துப்பாக்கியாக இருக்கும் என நம்புவோம்.

சீன தாத்தா சொன்ன தீபாவளி வாழ்த்து

எனக்கு ஒரு சீன தாத்தா இருக்காரு.பெயர் Xing Hui அவரை தாத்தா என்பதை விட நண்பர் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு நெருக்கமாக பழகக்கூடியவர்.

தீபாவளி வாழ்த்து சொல்லியே தீருவேன் என்று அடம்பிடித்ததன் விளைவுதான் இந்த வீடியோ..

தமிழ்-லாம் உனக்கு  வராது, விட்டுடு தாத்தான்னாலும் ஹ்கும் தாத்தா கேட்கவே இல்ல:)

இந்த பதிவை படிக்கும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும்,உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உங்கள் ஊரார்கள் அனைவருக்கும் இதய மகிழ்வுடன் எனது தீபாவளி வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.





தாத்தாவின் காமெடி வீடியோவை பாருங்கள் நன்றி:)







2 Responses to “துப்பாக்கி - சுட்டுத்தாக்கு”

தினபதிவு said...
12 November 2012 at 10:28

மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
http://www.dinapathivu.com/
தினபதிவு திரட்டி


திண்டுக்கல் தனபாலன் said...
12 November 2012 at 15:19

துப்பாக்கி - நாளை தெரிந்து விடும்...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News