Monday, 29 October 2012

சின்மயி -ன் போலி முகமா இது ?

எறும்பை மிதித்து கொன்றவனுக்கு ஏழாண்டுகள் சிறை தண்டனை - சின்மயி விருப்பம்

கருத்து சுதந்திரம் பறிபோகும் அபாயம் - வலைப்பதிவர்கள் அதிர்ச்சி

விளையாட்டு வினையானதா?

ராஜன் & க்ரூப்ஸ்  - சின்மயி இந்த இரண்டு தரப்பிற்கும் ஒராண்டுகளுக்கு மேலாகவே  பனிப்போர் நடந்து கொண்டேதான் இருந்திருக்கிறது.
இது கைது ,ஜெயில் வரைசெல்லும் என ராஜன் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்.வம்பை விலைகொடுத்து வாங்காதே என்பார்கள் . நம்ம பாசையில சொந்த காசுல சூன்யம்:) .எந்த வருமானமும் இல்லாத சமூக வலைத்தளங்களில்  நம் நேரமும் விரயம ஆவதோடு இப்படி பிரச்சினைகளையும் வாங்கிக்கொண்டு வருவதை என்னவென்று சொல்வது..?


பெண்களை இழிவு படுத்தினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற கமிஷ்னரின் அறிவிப்பு + சைபர் க்ரைம் பற்றிய ராஜதுரை அவர்களின் பதிவு ஆகியவை வலைப்பதிவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எந்த மாதிரியான வார்த்தைகள் சைபர் குற்றமாக கருதப்படும் என்பதற்கு சரியான வழிகாட்டுதல்களும்  இல்லை.

வலைப்பதிவர்கள் என்பவர்கள் யார்? அவர்களுக்கு மட்டும் ஏன் ஆபத்து?

இணையத்தில் எழுதுபவர்கள் அனைவரும் வலைப்பதிவர்களா?

பதில் : இல்லை என்றுதான் சொல்வேன்

இலாப நோக்கத்துடன்,ஏதோ ஒரு தினசரிகளில் வெளிவந்த செய்தியை பட்டும்,படாமலும்,தொட்டும் தொடாமலும் வெறும் செய்திகளை மட்டும் பகிர்ந்துவிட்டு அதற்கு கூட ஏதோ ஒரு சோர்ஸை காட்டிவிட்டு தப்பித்து கொள்கிறார்களே இவர்களல்ல பதிவர்கள்
எவ்வித வருமான நோக்கமும் இன்றி தான் எழுதுவதை தமிழர்கள் படிக்கிறார்கள், ரசிக்கிறார்கள் கூடவே அதுபற்றி சிந்திக்கவும் செய்கிறார்கள் என்ற ஒரே மகிழ்வை மட்டுமே அடிப்படையாக கொண்டு, எடுத்துக்கொண்ட தலைப்பை அலசி ஆராய்ந்து,பின்னி பெடல் கட்டி பின் முழுமையான பதிவாக்கி படைக்கிறார்களே இவர்கள்தான் உண்மையான பதிவர்கள். இப்படிப்பட்ட்டவர்கள் பெரும்பாலும் ப்ளாக்கர் மற்றும் வேர்ட்ப்ரஸ் தளங்களின் இலவச சேவையில் எழுதக்கூடியவர்களாக இருப்பார்கள்.
ப்ளாக்கர் மற்றும் வேர்ட்ப்ரஸ் தளங்களில் எழுதினால் பலரும் நம்பிக்கையுடன் வந்து படிப்பார்கள்.காரணம் இந்த தளங்கள் விளம்பரம் இல்லாதா தரமான பதிவுகளை தரக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கைதான்.

பிரபலங்கள் தவறு செய்தால் பதிவர்களால் தண்டனைதான் வாங்கித்தர முடியாது.குறைந்த பட்சம் அவர்களை நன்கு கலாய்த்துகொண்டாவது இருந்தார்கள்.இனி அதுவும் முடியாது என்பதில் வேதனைதான் மிஞ்சுகிறது..எங்கள் கிராமத்தில் இருக்கும் பால்காரர் வீட்டிற்கு சென்றால்.அவர் தன் மாடுகளை காட்டி இது அதோட அக்கா,அவளோட தங்கச்சி இவ,இந்த சின்னதோட பாட்டி அந்த பெரிசு என்று மாடுகளின் கதையை மனிதர்களின் உறவுகளைப்போல் அழகாகவே சொல்வார்.

இனி பதிவர்களும் காடு-மலை,சூர்யன் - சந்திரன்,வானம்-பூமி,கடல்-ஆறு,ஏறி-குளம்,ஆடு-மாடு,கோழி-கொக்கு,செடி-கொடி போன்றவற்றை பற்றித்தான் எழுத வேண்டிய நிலை வரும்:( அப்போதுதான் சைபர் க்ரமிடம் இருந்து தப்பிக்கலாம்.

கடந்த வார புதியதலைமுறை நிகழ்ச்சி ஒன்றில் கிருபா சங்கர் என்பவர் “யார் மனதையும் புண்படுத்தாமல் பேச வேண்டும் என்கிறார்”

ஐயா கிருபா சங்கர் அவர்களே..யார் மனதையும் புண்படுத்தாமல் இங்கு காலை வணக்கம் கூட சொல்ல முடியாது. ஏனெனில் நீங்கள் சொன்னவர்  ஊர் முழுக்க கடன்பட்டவராக கூட இருக்கலாம்.

நான் என்ற அகந்தையும்,எல்லாவற்றையும் மனதிற்கு எடுத்து செல்லும் பழக்கத்தையும் விட்டொழித்தாலே இது போன்ற பிரச்சினை இருக்காது.

சின்மயி விவகாரம்

இரு தரப்பிலும் தவறு இருக்கிறது.ராஜன் செய்தது சரி என்று இதுவரை யாரும் சொல்லவில்லை.(ராஜன் உள்பட) ,ஆனால் சின்மயி மட்டும் தன் தவறை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

பொதுவா பிரபலங்களே இப்டித்தான், நம்ம நித்திய எடுத்துக்கோங்க வீடியோவ ஆதாரத்தோட காட்டினப்ப கூட எப்டில்லாம் ப்ரூடா விட்டார்னு நம்ம எல்லார்க்குமே தெரியும்.

ராஜன்&க்ரூப்ஸ் எழுதியது தவறு என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.அதேசமயம்  எல்லைகளை கடக்கும் அளவிற்கு பேச தூண்டியது யார்?  சின்மயியும் அந்த நேரத்தில் கடுமையாக எழுதிவிட்டு பின் அழித்துவிட்டாரா? போன்ற கேள்விகள் சின்மயியை நோக்கி காத்திருக்கின்றன.

இட ஒதுக்கீடு பிரச்சினை

ஒரு நாள் சின்மயி உடனான விவாதத்தில் எங்கள் கிராமத்திலும் ஜாதி பிரச்சினை இருக்கிறது என்றேன்.அதற்கு சின்மயி எந்த கிராமம்,எங்கு இருக்கிறது? என்றெல்லாம் ஆவலுடன் கேட்டார்...

சின்மயியை பார்ப்பன ஆதிக்கவாதி என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு எதுவும் இல்லை.
தமிழர்கள் பெரும்பாலானவர்களிடம் 10% சாதி வெறி இன்னும் ஆழ் மனதில் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறது.ஒரு வேளை இதற்கு சின்மயியும் விதிவிலக்காக இல்லாமல் இருக்கலாம்.

மனிதர்களை விலங்குகளுடன் ஒப்பிட்டது.

எத்தனை விளையாட்டுத்தனமாய் இருந்திருந்தால் இப்படி விலங்குகளுடன் ஒப்பிட்டிருப்பார்.என்று நினைக்கும் போது ஒரு புறம் சிரிப்பும் மறுபுறம் கடுங்கோபமும் வருகிறது.சின்மயி தன் நிலை அறிந்து சமுதாய பொறுப்புணர்வுடன் எழுத வேண்டும்.

இந்த குற்றத்திற்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

செல்வி சின்மயி அவர்களே?

1) உயிரின் இரத்தமான பாலை நீங்கள் குடித்ததே இல்லையா,உங்கள் வீட்டில் பாம்பு,தேள்,பூரான் வந்தால் அதை கொல்லாமல் அதனுடன் கொஞ்சி விளையாடுவீர்களா?இதுவரை எந்த உயிரையும் நீங்கள் கொன்றதில்லையா?
ஒரு எறும்பை கூட மிதித்ததில்லையா?

2)  தமிழ்நாட்டிலையே பிறந்து,வளர்ந்து தமிழ் மொழி மூலமே பிரபலமாக வாழ்ந்துவரும் தங்களுக்கு,தமிழ் மொழி பற்றிய நல்ல எண்ணம் இருப்பதாகவே தெரியவில்லையே அது ஏன்?

3)  தமிழில் எழுதுபவர்களை ப்ளாக் செய்வது மட்டுமே தங்களின் பிடித்தமான பொழுதுபோக்கா?


தமிழ்த் தாயை மறப்பதும், பெற்ற தாயை மறப்பதும் ஒன்றே. 

பதிவர்களே

பிரபலங்களால் நாம் வாழவில்லை, பிரபலங்கள்தான் நம்மால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர் பிரபலம் என்பதற்காக மட்டுமே அவர் சொல்வதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதை  விட சாமான்யன்  கவிதைபோல் எழுதும் தமிழ் வரிகளை படிப்பது மிகவும் சுவாரஸ்யமானது.

சின்மயி -ன் போலி முகமா இது?

சின்மயி பாராட்டிய சின்மயி பேஸ்புக்கில் இருந்தால் பதிவை போட்ட சில நிமிடங்களில் Rekhadoll என்ற ஒரு பெண்  நன்றாக இருக்கிறது என பதில் அளித்திருந்தார்.இவர் சின்மயி-ன் போலி முகமாக(Fake Profile) இருக்கலாம் என்பது என் சந்தேகம் மட்டுமே:) ஸ்க்ரீன்ஷாட் பாருங்கள்.


கொட்டி தீர்த்துட்டாண்டா கொமாறு:)

இப்பதிவு யாருக்கும் எதிரானது அல்ல..இரு தரப்பிலும் இருக்கும் நியாய, அநியாயங்களை என் பார்வையில் சொல்லி இருக்கிறேன்.அவ்வளவே...

ராஜனுக்கான தண்டனைகள் போதுமானது.அனைத்து பிரச்சினைகளும் நீங்கி ராஜன்&க்ரூப்ஸ் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்பது என் அவா..!!!

மேலும் இப்பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை கருத்துப்பெட்டியிலும்,மின்னஞ்சல் வழியாகவும் தெரிவியுங்கள்.

மின்னஞ்சல் : admin@mazhai.net
நன்றி,
kamalakkannan c
Jurong west,
Singapore.


5 Responses to “சின்மயி -ன் போலி முகமா இது ?”

Anonymous said...
29 October 2012 at 10:25

ஒருவர் பிரபலம் என்பதற்காக மட்டுமே அவர் சொல்வதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதை விட சாமான்யன் கவிதைபோல் எழுதும் தமிழ் வரிகளை படிப்பது மிகவும் சுவாரஸ்யமானது.//////

Good one.Thakanks


ibragadeesh said...
29 October 2012 at 10:25

தமிழ்த் தாயை மறப்பதும், பெற்ற தாயை மறப்பதும் ஒன்றே. /////

y this kolaveri?


R.Puratchimani said...
29 October 2012 at 13:33

நல்ல பதிவு.....ஜாதியை எப்படி ஒழிப்பது என்பது இவர்களுக்கு தெரியவில்லை போலும்
ஜாதி பற்றி ஒரு பதிவு உங்கள் பார்வைக்கு.....பகுத்தறிவாதிகளின் கருத்தும் வரவேற்க்கப் படுகின்றன
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2012/10/blog-post.html


otti tamil said...
7 November 2012 at 15:51

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com/upcoming.php

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,


Anonymous said...
4 March 2013 at 01:19

UNGALLUKKU oruthavanga nalla irundha pudikkadha... pls delete dis.... and iam thing u r the 1 of member in that group.... avanga enna sonnannu nalla kettutu correct podunga,,, illa vera ela irrundha poi paarunga...


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News