Sunday, 14 October 2012

மாற்றான்

மாற்றான் விமர்சனம்


சூர்யா-வின் தந்தையும் வில்லனுமான ராமச்சந்திரன் ஒரு GENETIC SCIENTIST. பசுக்களின் மரபணுக்களை மாற்றி அமைத்து STEROID எனப்படும் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை மாட்டு தீவனத்தில் கலந்து மாடுகளுக்கு கொடுப்பதன் மூலம் வேகமான உடல் வளர்ச்சியுடன் 5 லிட்டர் பால் கொடுக்க  வேண்டிய ஒரு பசு 50 லிட்டர் வரை கொடுக்கிறது.பக்க விளைவுகளால் அடுத்த சில ஆண்டுகளிலையே மரணத்தை தழுவி விடுகின்றன இந்த பசுக்கள்.
 
இப்படி ஸ்டீராய்ட் மூலம் கிடைக்கும் பாலில்  குழந்தைகளுக்கான பால் பவுடரை ENERGION என்ற பெயரில் தயாரிக்கிறார் ராமச்சந்திரன்.


குழந்தைகளின் உடல் வளர்ச்சி அற்புதமாக இருப்பதால் மார்க்கெட்டில் சக்கை போடு போட்டு ஒரே வருடத்தில் பெரும் வளர்ச்சி அடைகிறது இவரது நிறுவனம்.

பொதுவாக ஸ்டீராய்ட் ஊக்க மருந்து எந்த பொருளில் கலந்திருந்தாலும் DETECTOR மூலம் கண்டுபிடித்து விடலாம்.ஆனால் எந்தவொரு DETECTOR களாலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு FORMULA மூலம் இந்த பால் பவுடரை தயாரித்து  இருக்கிறார் ராமச்சந்திரன்.

பரிசோதனை அதிகாரிகளும் சோதித்து விட்டு பால்பவுடரில் எந்த தவறும் இல்லை என ISO தரச்சான்றிதழ் கொடுத்து செல்கின்றனர்.

தடைசெய்யப்பட்ட ஸ்டீராய்ட்-ல் பக்க விளைவுகள் மிக அதிகம்.அடுத்த சில ஆண்டுகளில் மரனத்தை கூட தழுவலாம்.இப்படிப்பட்ட அபாயகரமான ஸ்டீராய்ட் குழந்தைகளின் பால் பவுடரில் கலந்திருப்பதால் அடுத்த தலைமுறையையே இது பெரிதும் பாதிக்கக்கூடும்.

இதை எப்படி தடுக்கிறார் என்பதே கதை...

மாட்டு தீவன பையில் MADE IN UKRAINE என இருப்பதால்.தீவனத்தின் ரகசியத்தை தெரிந்து கொள்ள ரஷ்யா செல்கிறார்கள் நம்ம ஹீரோ சூர்யாவும் நாயகி கஜல் அகர்வாலும்...

கதை ரஷ்யா(உக்ரைன்) பக்கம் செlல்கிறது...

மாற்றான் பற்றிய மற்ற விபரங்களை விக்கிபீடியாவில் தெரிந்து கொள்ளுங்கள்.

இப்ப ஒரு சூப்பர் சீன் பார்க்கலாம்.


தொழிலாளி: தம்பி அது கட்டிக்கப்போற பொண்ணா?

சூர்யா            : ஏன் அப்டி சொன்னீங்க.!

தொழிலாளி  அது கண்ணுல பார்த்தா அப்டி தெரியுதுங்க..

சூர்யா            : வச்சுக்குங்க..அட காச வச்சுக்குங்க..

கஜல்             : சொன்னதுக்காக காசு கொடுத்தீங்களா இல்ல ,காசு கொடுத்து இப்டி சொல்ல வச்சீங்களா?
1992 ரஷ்யா-அமெரிக்கா பனிப்போர் நடந்த காலம்.இரு நாடுகளும் நேரடியா மோதிக்கொள்ள வாய்ப்பு இல்லாததால .ஒலிம்பிக்ல தங்கள் பலத்தை காட்ட விரும்பின.

அதிலும் ரஷ்யா, எப்டியாவது ஒலிம்பிக்ல பதக்கங்களை குவித்து  தங்கள் நாட்டோட பலத்தை காட்ட தீவிர முயற்சியில் இறங்கியது.

குறுக்கு வழியை தேடியது.
ஸ்டீராய்ட் பயன்படுத்துவது மட்டுமே ஒரே வழி...பயன்படுத்தினால கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற நிலையில் டிடெக்டர்களால் அடையாளம் காண முடியாத ஒரு சூத்திரத்தை தேடியது ரஷ்யா.

வில்லன் ராமச்சந்திரனிடம் இந்த சூத்திரம் ஏற்கனவே இருப்பதால் அவரின் உதவியுடன் ஒலிம்பிக் வீரர்கள் அனைவருக்கும் த்டை செய்யப்பட்ட ஊக்க மருந்து கட்டாயப்படுத்தி கொடுக்கப்படுகிறது.

1992 பார்சிலோனா  ஒலிம்பிக்கில் வீரர்களும்  பதக்கங்களை குவித்து  நாடே மகிழ்ச்சியில் திளைக்கிறது.

அடுத்த சில ஆண்டுகளில் வீரர்கள் அனைவரும் ஊக்க மருந்தின் பக்க விளைவுகளால் நரம்பு தளர்ச்சி,கிட்னி செயல் இழப்பு போன்ற நோய்கள் ஏற்பட்டு ஒருவர் ஒருவராக உயிர் இழக்கின்றனர்.

உயிருக்கு போராடும் மற்ற வீரர்களை பாதுகாப்பாக அடைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஒலிம்பிக் மோசடி உலகுக்கு தெரிந்தால் ரஷ்யாவின் மானம் போவதோடு ஒலிம்பிக்கில் நாட்டை தடையும் செய்துவிடுவார்கள்.இது நாட்டுக்கே பெருத்த அவமானம என்ற நிலையில் 39 அனாதை பிணங்களை விமானத்தில் ஏற்றி வெடிக்க செய்து வீரர்கள் அனைவரும் விமான விபத்தில் இறந்து விட்டதாக நாடகம் நடத்துகிறது ரஷ்யா அரசு.

பால் பவுடரில் கலந்திருக்கும் ஸ்டீராய்டையும்,மற்ற மோசடிகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து நம் குழந்தைகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே மீதி க்தை.

நிறைய லாஜிக் மீறல்கள்,இறுதிக்காட்சியில் நீ ஒரு அப்பனுக்கு பொறக்கல..10 அப்பனுக்கு பொறந்தவன் என்று சூர்யாவை பார்த்து சொல்வது சுத்த அபத்தம்.வில்லன் என் ப்ராஜக்டை யாரும் மதிக்கல..எந்த கடவுளும் எனக்கு உதவல அதனால்தான் இப்டி பன்னினேன் என்று தன் கணக்கிற்கு ஒரு கதையை சொல்கிறார்.

பாடல்களும் படமும் சுமார் ரகம்.

நன்றி.


4 Responses to “மாற்றான்”

Philosophy Prabhakaran said...
14 October 2012 at 15:26

பதிவின் இடையே இப்படி பெட்டிச்செய்தி போடுவது எப்படி என்று விளக்குங்களேன்...


Kamalakkannan c said...
14 October 2012 at 20:37

இந்த பெட்டியை பதிவின் இடையே மட்டுமல்ல எங்கு வேண்டுமானாலும்..அல்லது முழு பதிவாக கூட போடலாம்..
<*div id="box1" style="background-attachment: initial; background-clip: initial; background-color: #3bb9ff; background-image: initial; background-origin: initial; border-bottom-left-radius: 20px 20px; border-bottom-right-radius: 20px 20px; border-top-left-radius: 20px 20px; border-top-right-radius: 20px 20px; height: 70px; padding-bottom: 5px; padding-left: 5px; padding-right: 5px; padding-top: 5px; width: 420px;">

இங்கு நீங்கள் எழுத வேண்டியதை எழுதி கொள்ளலாம்


மேலுள்ள கோட்களில் color:#3bb9ff என்பதில் #3bb9ff க்கு பதிலாக
உங்களுக்கு பிடித்த கலர் உ.தா.blue,yellow,green

radius: 20px
இதில் 20px க்கு பதிலாக உங்களுக்கு தேவையான ஆரத்தின் அளவு..

height: 70px;
இதில் 70px க்கு பதிலாக தேவையான உயரத்தின் அளவு

width: 420px
இதில் 420 px க்கு பதில் உங்களுக்கு தேவையான அகலத்தின் அளவை போட்டுக்கொள்ளுங்கள்.

மிக முக்கிய குறிப்பு:
நீங்கள் பதியும்போது
div க்கு முன்னால் இரண்டு இடங்களில் இருக்கும் *ஐ நீக்கி விடுங்கள்.
அப்ப்டி நீக்கி இங்கு பதிய முடியாது.ஏனெனில் கமெண்ட் பாக்ஸ் div களை ஏற்றுக்கொள்ளாது.
அவ்வளவே:)

சந்தேகம் இருப்பின் கேளுங்கள்:)


Philosophy Prabhakaran said...
15 October 2012 at 01:06

தகவலுக்கு நன்றி...


திண்டுக்கல் தனபாலன் said...
16 October 2012 at 07:31

படம் : பரவாயில்லை ரகம்...

பெட்டிச்செய்தி விளக்கத்திற்கு நன்றி...


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News