Saturday, 29 September 2012

தாண்டவம் சினிமா விமர்சனம்-Thandavam Movie Story Review In Tamil

தாண்டவம் விமர்சனம்-Thaandavam Movie Story Review In Tamil


சீயான் விக்ரம்,அல்வா அனுஷ்கா,வத்தல் அமி ஜாக்சன்,லடுக்கி லட்சுமி ராய் இன்னும் பலர் நடித்து,.. விஜய் இயக்கி, ஜீ.வி.ப்ரகாஷ் குமார் இசைத்து வெளிவந்துள்ள படம் தாண்டவம்.

கதை அரதப்பழசு....தேய்ந்து போன ரீலை ஜோடிச்சு வியாபாரத்துக்கு மறுபடியும் விட்றுக்காங்க:)

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்.. நம்ம தாண்டவம் படத்த சில நொடி பார்த்தா பிறந்த குழந்தையும் அழும்:(

 தெய்வத்திருமகள் படத்த பார்த்தப்ப இந்தப்படம் இன்னும் நல்லா ஜெயிச்சிருக்குனும்னு எனக்குள்ளையே தோணிச்சு..அது தழுவல்-ன்னு சொன்னாலும்,கை நழுவல்னு சொன்னாலும்...பெரும்பாலான கதைகள் எல்லாமே எங்கோ ஒரு மூலையில் படமாகி விட்டதுதான்.இருந்தாலும் அதை திரைக்கதையின் மூலம் முடிந்தவரை மாற்றி அமைத்து படத்தை எப்படி சுவாரஸ்யமாக்குகிறோம் என்பதுதான் முக்கியம்.அதில் ஏனோ தானோவென்று செய்துள்ளார் விஜய்.


காசியில கண்னை கசக்கினார்..காசியில் சில தூசிகள் விழுந்தாலும் கண்ணை பாதிக்காமல் எடுத்து விட்டனர்.

தாண்டவத்தில் தலைப்புக்கேற்ற வேகம் எதுவும் இல்லை...எருமை மாட்டுமேல் மழை பெய்ததுப்பொல் என்று கிராமங்களில் சொல்வார்கள்..அப்படி நகர்கிறது திரைக்கதை.

தாண்டவத்தில் தடம் மாறி தாண்டி விட்டார்களோ..!!!


விக்ரம்
ஒரு இஞ்ச் மேக்கப் போட்டு்ம்  வயது மேக்கப்பை வென்றது.

அனுஷ்கா
ஆறடி அல்வாதான் நம்ம அனுஷ்கா என்ன கொஞ்சம் ஓட்டை அனுஷ்கா...க்ளோஷ் அப்ல காட்டும்போது கன்னத்துல ஓட்டைகள் நிறையவே..!!!!  விகரம் வயதுக்கேற்ற ஜோடி..

அமி ஜாக்சன்

வத்திப்போன அமி ஜாக்சன்.அழகின்னு மத்தவங்க சொல்லிதான் அப்டியான்னு கேட்க வேண்டியிருக்கு:)

லட்சுமிராய்

வெளிநாடும், நம்மநாடும் சேர்ந்த கலவை அழகியா இருக்குறதால அம்மனி மேல நம்ம பசங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு இருக்கத்தான் செய்யுது.


சந்தானம் ,நாசர்,ஜி.வி.பிரகாஷ்குமார்.
சந்தானம் காமெடி பன்றாரோ,இல்லையோ இவருக்கு கைத்தட்ட ஒரு கூட்டம் உருவாகிகிட்டே இருக்கு:)
நாசர் வாங்கின காசுக்கு  நடிச்சிருக்கார்.
இசை சுமார் ரகம் தான்..ஜி.வியை சொல்லி குத்தமில்ல இயக்குனர்தானே கேட்டு வாங்கனும்;)

படத்துல என்ன பெருசா கதை இருக்குன்னு தெரிய்ல..இதுல வேற திருடிட்டான்னு ஒரு சர்ச்சை வேறு...

இதான் கதையாம்....

1) விக்ரம் இந்திய உளவுத்துறையான ”ரா” அமைப்பின் முக்கிய அதிகாரியா பணி புரிகிறார்.
2) நம்ம இராணுவம் தவறவிட்ட ரகசியம் தீவிரவாதிகள் கையில் சிக்குது.
3)அந்த தீவிரவாதிகளை பிடிக்கும் பொறுப்பை விக்ரம் ஏற்றுக்கொண்டு லண்டம் செல்கிறார்.
4) இதுக்கிடையில் விக்ரம் வீட்ல பொண்ணு பார்த்து கல்யாணம் முடிக்க நினைக்குறாங்க வழக்கம்போல நம்ம ஹீரோ கல்யாணம் வேணாம்னு சினுங்குறாரு.
5)அப்ரம் அனுஷ்கா அழகுல மயங்குறாரு.
6)கெட்டி மேளம் கொட்றாங்க..முதலிரவில் ரொமான்ஸ் நடக்குது ஆனா நடக்க வேண்டியது நடக்கல...(ரெண்டு பேரும் நல்லா புரிஞ்சுக்கனுமாம்)
7) விக்ரமும்,அனுஷ்காவும் லண்டன் போறாங்க..அங்க தீவிரவாதிகள் அனுஷ்காவை காலி பன்னிடறாங்க..விக்ரமோட ரெண்டு கண்ணும் காலி.
8).ரெண்டு கண்ணும் இல்லாம வில்லன் கும்பலை எப்டி பழி தீர்க்கிறார் என்ற வழமையான கதை.

இந்த படத்துல உனக்கு எதுவுமே பிடிக்கலையா ...? நீ என்ன  அவ்ளோ பெரிய அப்பாடக்கரா -ன்னுதானே நினைக்கிறீங்க:)

சொல்றேன் சொல்றேன்...

எனக்கு  அனுஷ்கா நடிப்பு மட்டுமில்ல  ..அனுஷ்காவையும் பிடிச்சிருக்கு..லட்சுமி ராய் சுமார் ரகம்...அப்ரம் விக்ரம் நடிப்பு சொல்லவே வேணாம் வழக்கம்போல அருமை..சில பாடல்கள் நல்லா இருக்கு..ஒளிப்பதிவு செய்த நீரவ்சா நல்லா பண்ணியிருக்கார்..

அவ்ளோதான் மக்களே..
படம் பார்க்கலாமா வேண்டாமா.இல்ல ஒரு தடவ பார்க்கலாமா?இதெல்லாம் நான் சொல்ல மாட்டேன்..

உங்ககிட்ட நிறைய பணம் இருந்தா கொண்டு போய் கொட்டலாம்ம்...ஐ மீன் பணம் கொடுத்து பார்க்கலாம்னு சொன்னேன்.

நன்றி மீண்டும் எனக்கு தோன்றும்போதெல்லாம் சந்திப்போம்.:)10 Responses to “தாண்டவம் சினிமா விமர்சனம்-Thandavam Movie Story Review In Tamil”

திண்டுக்கல் தனபாலன் said...
29 September 2012 at 18:57

விமர்சனத்திற்கு நன்றி...


Kamalakkannan c said...
29 September 2012 at 20:56

நல்வரவு திண்டுக்கல் சார்:)


நபி வழி said...
30 September 2012 at 18:53

ரண்டு நாள் காத்திருந்தால் dvd வந்திரும் பாத்துக்கலாம்


ibragadeesh said...
30 September 2012 at 20:03

அமி போட்டா ஜூப்பரு...


vaishnavi kesavaraja said...
30 September 2012 at 23:12

poddang


Kamalakkannan c said...
1 October 2012 at 05:55

சரிதான்...இப்பவே வந்துட்டு பட் கேம் குவாலிட்டி.. நன்றி நபிவழி:)


Kamalakkannan c said...
1 October 2012 at 05:57

படிக்க வேண்டியத படிககாம..பார்க்க வேண்டியத மட்டும் ஹ்ம்ம்ம்:) நன்றி ibragadesh


Kamalakkannan c said...
1 October 2012 at 05:58

தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும்..மிக்க நன்றி வைஷ்ணவி மேடம்:)


'பதஞ்சலி' ராஜா said...
1 October 2012 at 18:17

நல்ல படம் பாருங்கள்.......விமர்சனம் no coments


Kamalakkannan c said...
2 October 2012 at 20:34

நன்றி பதஞ்சலி ராஜா:)


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News