Wednesday, 26 September 2012

பெண்-பெண்கள் A TO Z

பெண்|பெண்கள்|பெண்மை|பெண்ணியம்|

புதுமைப்பெண்


பெண்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
அன்பே உருவான உயிர் -புதுக்குறள்.

ஆண்,பெண் இருவரும் சமமானவர்கள்தான் ஆனால் வெவ்வேறு வகைகளில்...!!!..  -இது பல அறிஞர்களின் கூற்று.

நம் சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி நான் பார்த்ததை,சொல்ல நினைப்பதை  அப்படியே எழுதுகிறேன்.

பெண்-பெண்கள்பெண்களின் நிலைகள்:
  • பேதை (07 வயதுக்குக் கீழ்)
  • பெதும்பை(07 - 11 வயது)
  • மங்கை(11 - 13 வயது)
  • மடந்தை(13 - 19 வயது)
  • அரிவை(19 - 25 வயது)
  • தெரிவை(25 - 31 வயது)
  • பேரிளம்பெண்(31 - 40வயது)

நம்ம நேரா அரிவை-க்கு வந்துவிடலாம் .இந்த வயதில்தான் பெண்ணிற்கு காதல் முளைக்கும்,காமம் முளைக்கும்......!!!   ஏன் இதெல்லாம் ஆண்களுக்கு முளைக்காதா?ன்னு யாரும் கேட்கப்படாது:)

பெண்கள் என்றாலே பொதுவா கற்பனைகளின் எல்லைகள் என்றே சொல்லலாம்.அதுவும் இந்த வயதில் அதி மிகுதியாக இருக்கும்.

நன்றாக படிக்கும் பெண்கள் சுலபமாக காதல் வலையில் சிக்கிவிடுவதாகவே தோன்றுகிறது.மன அழுத்தம், நம் கல்வி சூழல் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். பாடத்தில் இருப்பதை புரிந்து படிக்காமல் அப்ப்டியே மனப்பாடம் செய்வதுபோல், வெளி உலகையும் புரிந்து கொள்ளாமல் அப்படியே நம்பி ஏமாறுகிறார்களோ???

பெண்கள் மறைத்து காட்டும் மாயக்கண்ணாடி அல்ல...
நிஜத்தை காட்டும் அன்பு கண்ணாடி..!

துளி அளவு அன்பை கொடுத்தால், கடலளவு அன்பை பெறலாம்...

உலகம் அன்பிற்காகத்தான் ஏங்குகிறது.அன்பின் உருவமே பெண் தான்.

பெண்களை காதலிப்பது எப்படி?

ஒரு பெண்ணை உண்மையாகவே விரும்புகிறீர்களா?
பார்த்தவுடனே காதலை சொல்லாதீர்கள்.முதலில் அவரைப்பற்றி சிறிதளவாவது தெரிந்து கொள்ளுங்கள்.அவருடன் பழகும் வாய்ப்பை எப்படியாவது ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.பந்தா,மற்றும் புதுமை என்ற பெயரில் மூக்குத்தி குத்தி கொள்வது,குருவிக்காரன் போல் முடி வளர்ப்பதெல்லாம் வேண்டாம்.சாதாரணமாக,எளிமையாக,இயல்பாய் இருங்கள்..மிக அதிகமாக பேச வேண்டாம்.சரியான நேரத்தில் சரியான சொல்லாடலை பயன்படுத்துங்கள்.குறைந்த பட்சம் அவர் இருக்கும்போதாவது மட்டும் மற்ற பெண்களை பார்த்து பல் இளிக்காதீர்கள். நகைச்சுவை உணர்வோடு பேசுங்கள்.”உன்னுடன் காலம் முழுக்க இருந்தா எவ்ளோ சந்தோசமா இருக்கும் “என்று ஒரு நிமிடமாவது நினைக்கும் அளவுக்கு ஒரு தடவையாவது அவர் மனதை கொள்ளை கொள்ளுங்கள்.

காதலியுடன் பழகும் நேரத்தில் காதலியையோ,மற்ற பெண்களையோ கண்ட இடங்களில் காமப்பார்வை பார்க்காதீர்கள்.காதலியின் நன்னம்பிக்கையை பெறுங்கள்.

5 அல்லது 6 மாதங்களுக்கு பின் தைரியமாக காதலை சொல்லுங்கள். வருடக்கணக்கில் சொல்லாமல் இருக்க வேண்டாம்..பின் வடை மற்றவருக்கு போய்விடும்.

காலத்தோடு காதல் செய்யுங்கள். உண்மைக்காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

முக்கிய குறிப்பு:- இவை எல்லா பெண்களுக்கும் பொருந்தாது:)

தாய்மையில் பெண்பெண்-தாய்-அம்மா


மறுபிறப்பு என்று சொல்லப்படும் தாய்மையை அடைந்தால்தான் ஒரு பெண் முழுமையடைவதாக நம் சமூகம் சொல்கிறது.

ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை ஒன்று உண்டு என்ற நியூட்டன் விதியைப்போல் ஒவ்வொரு வலிக்கும் அதற்கு சமமான எதிர் அன்பை தன் கனவனிடம் எதிர்பார்க்கிறாள் ஒரு பெண்.

உயிர் பிரியும் வலியை மகிழ்வுடன் தாங்க அதற்கு  நிகரான  சக்தியாய்.. அன்பை ,ஒரு பெண் தன் கனவனிடம் எதிர்பார்க்கிறாள்.

குடும்பத்திலும்,சமூகத்திலும் நம் பெண்களின் பங்கு.

கீழுள்ள வீடியோவை பார்த்தாலே போதும்....தவறாமல் பாருங்கள்.மிக அற்புதமாக எடுக்கப்பட்ட ஒரு காணொளி.
இன்றைய நிலையில் பெண்களின் முன்னேற்றம்.

பல துறைகளில் ஆணுக்கு நிகராகவும் ,சில துறைகளில் ஆண்களை வென்றும் ! நம் பெண்கள் சாதித்து கொண்டிருக்கின்றனர்.

பெண் சிசுக்கொலை ஏன்?

சமீபத்தில் நிகழ்ந்த இந்த கொடுமையை,
இங்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பெண் விடுதலை அல்லது பெண்கள் சுதந்திரம்.

பெண் ,ஆணாதிக்கத்தால் அடிமைப்படுத்தப்படுவதற்கு முக்கிய  காரணங்கள் இரண்டு
1.பெண்கள் உடல் அமைப்பு
2.படிப்பறிவின்மை அல்லது வருமானமின்மை
ஆதலால் நன்கு படித்து வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதியுங்கள்.உங்களை எந்த ஆணாலும் ஆதிக்கம் செலுத்த முடியாது.

புதுமைப்பெண்-புதுமை
பெண்களிடம் எனக்கு பிடிக்காத ஒன்றே ஒன்று இந்த நகை பைத்தியம் பிடித்து அலைவதுதான்:)

புதுமைப்பெண்-புதுமை பெண்-பெண்ணியம்.

பெண்ணியம் பேசும் பெண்கள் பெரும்பாலும் படித்து வேலைக்கு செல்பவராகவே இருப்பார்கள்.புதுமைப்பெண் என்று இணையத்தில் தேடினாலே பல பதிவர்கள் வெறியுடன் பெண்களுக்கு எதிராக எழுதி தள்ளி இருக்கிறார்கள்.

பாதிக்கப்படாமல் இப்படியெல்லாம் எழுதியிருக்க மாட்டார்கள்.ஒருவேளை பாரதி கண்ட புதுமை பெண்கள் என்ற நினைப்பில்,பெண்ணியவாதி என்ற போர்வையில் ஆண்களை வதைத்து பெண்ணாதிக்கம் செய்கிறார்களோ? என்னவோ..!!!!

பெண்களுக்கான சொத்துரிமை சட்டம்

ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த இந்த பதிவை இங்கு படிக்கலாம்.

வரதட்சனை-பெண்

எதோ ஒரு படத்தின் பாடல் வரிகள்.

அன்பும் தந்து
அறிவும் தந்து
அழகான பெண் தந்தா..
அதுக்கும் கேட்பான் கூலி

காரும் தந்து
சீரும் தந்து
சில லட்சம் தந்தாத்தான்
தருவான்
தங்கத்தாலி
கருப்பையை நிரப்பிடதான்
பணப்பையை கேட்கிறியே
மனிதா சொல் உனக்கென்ன
பேரூ..
வெட்கக்கேடு..

கோட்டுப்போட்ட மாப்பிள்ளைக்கு
ரேட்டுக்கொஞ்ச்ம் ஜாஸ்தி என்றால்
இதுக்குப் பேரு என்ன
ஆண் விபச்சாரம்
இது அவச்சாரம் ....


இவை அனைத்துமே பெண்கள் பற்றிய எனது கருத்துக்கள் மட்டுமே...உங்கள் கருத்துக்களையும் தவறாமல் பதிவு செய்யுங்கள் நண்பர்களே..:)

நன்றி . நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடரும்.......


3 Responses to “பெண்-பெண்கள் A TO Z”

திண்டுக்கல் தனபாலன் said...
26 September 2012 at 10:49

நல்லதொரு பகிர்வு... நன்றி...

கண்ணொளியை பிறகு முடிந்தால் பார்க்கிறேன்... (கரண்ட் கட் 10 to 16 hours)


Kamalakkannan c said...
29 September 2012 at 20:57

நன்றி திண்டுக்கல்:)


Anonymous said...
15 June 2013 at 18:44

thaangal solvadhu pol avargal paadhika pattum irukalam alladhu padhika pattavarkalai paarthum eludhiyirukalaam.....baradhi kanda pudhumai pennai ninaikavillai ovoruvarum..eni varum en pen kulandhai nalamaga/padhugapaga valara vendum enkindra aadhangam...


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News