Monday, 10 September 2012

நீதானே என் பொன்வசந்தம் - Neethane En Ponvasantham.

நீதானே என் பொன்வசந்தம் பாடல்கள் + பாடல் வரிகள் - Neethane En Ponvasantham Movie Songs + Lyrics + Review


Neethane En Ponvasantham Movie Stills
Google Trend-ல் கடந்த வாரம் 1-9-2012 முதல் 7-9-2012 வரை  நீதானே என் பொன்வசந்தம் பாடல்கள் BREAK OUT செய்துள்ளது இதன் மூலம் இசைக்கு எப்பொழுதும் தானே இளமையான ராஜா என மீண்டும் நிரூபித்துள்ளார் நம் இசைஞானி .

You Tube ல்  நீதானே என் பொன்வசந்தம்  ட்ரெய்லரும் சூப்பர் ஹிட்.இது அஜித்-ன் பில்லா 2 -வை விட அதிகம்.இதன் மூலம் இப்படத்திற்கு சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருப்பதை நன்றாகவே உணர முடிகிறது.

இந்த எதிர்ப்பார்ப்புகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக நம் இசைஞானி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இல்லனா சமந்தா-வா- கூட இருக்கலாம்:)

SME எனப்படும் Sony Music Entertainment நிறுவனம் இப்படத்தின் ஆடியோ கேசட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாக சொல்கிறது.


இணையத்திலும்,ஆங்காங்கே தெருக்கடைகளிலும் இலவசமாகவே கிடைக்கும்போது விலை கொடுத்து Audio CD வாங்கிய மகான்களுக்கு நன்றி:)

அழகான கவிதை-யை போல் இருக்கும் ”நீதானே பொன்வசந்தம்”- தலைப்பில் மட்டுமில்லாமல்  படமும் அப்படியே அமைந்தால் நல்லாத்தான் இருக்கும்.

இசையில் சக்கை போடு போடுறதால,படமும் சூப்பர் ஹிட் தான் அப்டிங்குற நம்பிக்கைல கவுதம் மேனன் சந்தோசமா இருக்கலாம்.ஆனால் இசையில ஜெயிக்கிற படங்கள் எல்லாமும் திரையில் ஜெயித்து விடுவதில்லை மக்கா..!!!

சரி இப்ப கதைக்கு போவோம்:-

கெளதம் மேனன் இயக்கி, ஜீவா,சமந்தா,சந்தானம் இன்னும் பல்ர் நடித்து  நம்ம இசை கடவுள் இளையராஜா இசைத்து வெளிவர இருக்கும் திரைப்படம்தான் இந்த நீதானே என் பொன் வசந்தம் .பேரை கேட்கும்போதே இது காதல் படம்னு நல்லா தெரியுது.சரி காதல் இல்லாத தமிழ் சினிமாவா???

நீதானே என் பொன்வசந்தம் பாடல்கள்-Neethane En Ponvasantham Songs


மொத்தம் 8 பாடல்கள் உள்ளன.கார்த்திக்,யுவன் சங்கர் ராஜா,இளையராஜா,ரம்யா,ஜெகன்,சூரஜ்,சுனிதி மற்றும் பலர் பாடியிருக்காங்க.


பாடல்கள் பழைய நாட்களை ஞாபக படுத்தினாலும் எனக்கு பிடிச்சிருக்கு.இசை பற்றி இரு வேறு கருத்துக்கள் இணையத்தில்  உலவுகிறது.

நீதானே என் பொன்வசந்தம் பாடல் வரிகள் - Neethane En Ponvasantham Lyrics In Tamil


பாடல்களை  நா.முத்துக்குமார் இயற்றி இருக்கிறார்.பாடல் வரிகள் இசையை ஆக்கிரமித்து தெளிவாக கேட்கிறது.

முதல் முறை பார்த்த ஞாபகம் பாடல் வரிகள் - Mudhal Murai Lyrics

முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ... ஓர் பாரம்... !!

மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஓர் ஈரம்..!!!

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்.

வெயிலா,மழையா,வலியா,சுகமா எது நீ..!!!

 நீதானே என் பொன்வசந்தம்.....

நீந்தி  வரும்  நிலவினிலே
ஓர்  ஆயிரம்  ஞாபகங்கள்
நீண்டநெடும்   கனாவினிலே
நூறாயிரம்  தீ  அலைகள்
நெஞ்சமெனும்   வினாக்களுக்குள்
என்  பதில்  என்ன  பல  வரிகள்

சேரும்  இடம் விலாசத்திலே  உன்  பார்வையின்  முகவரிகள்
ஊடலில்   போனது  காலங்கள்
இனி  தேடிட  நேரங்கள்  இல்லையே
தேடலில்  நீ  வரும்  ஓசைகள்
அங்கு  போனது  உன்  தடம்  இல்லையே
காதல்  என்றால்  வெறும்  காயங்களா ?
அது  காதலுக்கு  அடையாளங்களா ..!!!

நீதானே என் பொன்வசந்தம்.....

என்னோடு வா வா பாடல் வரிகள் -Ennodu vaa vaa-Yennodu vaa vaa Lyrics In Tamilஎன்னோடு  வா  வா  என்று  சொல்ல   மாட்டேன்
உன்னை  விட்டு  வேறு  எங்கும்  போக  மாட்டேன்

என்னோடு  வா  வா  என்று  சொல்ல   மாட்டேன்
உன்னை  விட்டு  வேறு  எங்கும்  போக  மாட்டேன்

செல்ல  சண்டை  போடுகிறாய்
தள்ளி  நின்று  தேடுகிறாய்
அஹ்  அஹ்  அஹ் அன்பே  என்னை  தண்டிக்கவும்
புன்னகையில்  தண்டிக்கவும்  உனக்கு உரிமை  இல்லையா


என்னோடு  வா  வா  என்று  சொல்ல   மாட்டேன்
உன்னை  விட்டு  வேறு  எங்கும்  போக  மாட்டேன்

கன்னம்  தேடும்  கூந்தல்
நீ  செய்வதும்  என்னை  கொஞ்சம்  பார்கதானடி
கண்ணை  மூடி  தூங்குவதை  போல்
நீ  நடிப்பது  எந்தன்  குரல்  கேட்கதானடி

இன்னும்  என்ன  சந்தேகம்   என்னை  இனி  என்னாலும்
தீயாக  பார்காதடி
செல்ல  பிள்ளை  போல  நீ  அடம்பிடிப்பதை  என்ன  சொல்ல
என்னை  விட  யாரும் இல்லை  அன்பு  செய்து  உன்னை  வெல்ல
சண்டை  போட்ட  நாட்களைதான்  எண்ணி  சொல்ல ..கேட்டுகொண்டால்  கழுகும்  பயந்து  நடுங்கும்

என்னோடு  வா  வா  என்று  சொல்ல   மாட்டேன்
உன்னை  விட்டு  வேறு  எங்கும்  போக  மாட்டேன்

காதலுக்கு  இலக்கணமே  தன்னால்  வரும்
சின்ன  சின்ன  தலைகணமே
காதல்  அதை  போருக்கனுமே  இல்லையெனில்
கட்டி  வைத்து உதைக்கணுமே
உன்னுடைய  கையாலே  தண்டனையை  தந்தாலே
என்  நெஞ்சம்  கொண்டாடுமே

கன்னத்தில்  அடிக்குமடி  முத்தத்தாலே  வேண்டும்மடி
மத்ததெல்லாம்  உன்னுடைய  இதழ்களின்  இஷ்டப்படி
எந்த  தேசம்  போனபோதும்  என்னுடைய
சொந்த  தேசம் உனது  இதயம்  தானே ....

என்னோடு  வா  வா  என்று  சொல்ல   மாட்டேன்
உன்னை  விட்டு  வேறு  எங்கும்  போக  மாட்டேன்

சரி படம் எப்ப ரிலீஸ் ஆகும்? - Neethane En Ponvasantham Movie Release Date

நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியாகலாம்.

 நன்றி:)


6 Responses to “நீதானே என் பொன்வசந்தம் - Neethane En Ponvasantham.”

திண்டுக்கல் தனபாலன் said...
10 September 2012 at 13:42

சில பாடல்கள் படக்காட்சியோடு கேட்டால் பிடிக்கும் என்று நினைக்கிறேன்... படம் வரட்டும்... பார்க்கலாம்... கேட்கலாம்...

பாடல் வரிகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...


Lakshmanan said...
11 September 2012 at 18:33

A correction to the lyrics for என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் song...

The line சண்டை போட்ட நாட்களைதான் எண்ணி சொல்ல ..கேட்டுகொண்டால் கழுகும் பயந்து நடுங்கும் should be changed to ''சண்டை போட்ட நாட்களைதான் எண்ணி சொல்ல ..கேட்டுகொண்டால் கணக்கும் பயந்து நடுங்கும்''.Kamalakkannan c said...
11 September 2012 at 20:18

தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே:)


Kamalakkannan c said...
11 September 2012 at 20:20

நன்றி திண்டுக்கல் சார்:)


Perinpanathan Tharsan said...
17 December 2012 at 13:23

நான் பார்த்ததிலே என்னை கவர்ந்த படமும் பாடலும் இதுதான்


Perinpanathan Tharsan said...
17 December 2012 at 13:23

நான் பார்த்ததிலே என்னை கவர்ந்த படமும் பாடலும் இதுதான்


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News