Thursday, 23 August 2012

தன்னம்பிக்கை எனும் வெற்றியின் மந்திரம்.


தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம்.


சூரியன் எஃப்.எம்.ஆர்.ஜே. கெளதமி தன்னோட தன்னம்பிக்கையை இப்டி சொல்றாங்க கேளுங்க:)

 • நாங்க எல்லாமே பரிசு,இல்லனா இந்த பூமியே தரிசு மாமூ...!!!   -சொன்னவர் படத்தில் இருக்கும் கெளதமி.

 • ஆணும்,பொண்ணும் ஒன்னு சேர்ந்து புள்ள பெத்தா நல்லாருக்கும்,ஊசி போட்டு பெத்தா நல்லாருக்குமா..!!!  -சொன்னவர் வைரமுத்து. 
 •  ஒருவன் சந்தோசமாக வாழவேண்டும் என்றால்,முதலில் அவன் தன்னைத்தானே நம்ப வேண்டும்.
 • புரிந்து கொள்ளாதபோதும்,பொறாமைப்படும்போதும் மனிதன் மற்றவனை முட்டாளாக கருதுகிறான்.
 • சோம்பேறிக்கு எல்லாமே கடினமாய் தோன்றும்,ஊக்கமுள்ளவனுக்கும் எல்லாமே எளிதாய் தோன்றும்.
 • உதிரும் பூவாக இல்லாமல்,அதை சுமக்கும் செடியாக இருப்பவனே நண்பன்.
 • உன் திறமை ஒன்று என்றாலும் அதை ஒளித்து வைப்பது உன்னையே ஒழிப்பதற்கு சமம்.
 • ஒருவனின் தன்னம்பிக்கையும்,சுய ஒழுக்கமுமே அவனின் அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கும்.
 • பலவீனமானவர்களின் வழியில் தடைக்கல்லாய் இருப்பது,பலமுடையவர்களின் வழியில் படிக்கல்லாவே இருக்கும்.
 • ஆசை பேராசையாகவும்,அன்பு வெறியாகவும் மாறும்போது அங்கு அமைதி விலகி சென்று விடும்.
 • முட்டாளின் தோழமையை விட,ஒருவன் தனியாக வாழ்வது எவ்வளவோ மேல்-புத்தர்
 • வறுமையினால் பெரிய துன்பம் இல்லை,செல்வத்தினால் உயர்ந்த நன்மையுமில்லை-கதே
 • உழைப்பை மட்டும் விற்கலாம்,ஒரு நாளும் ஆன்மாவை விற்க முடியாது-ரஸ்கின்.
 • மவுனம் என்னும் மரத்தில்,அமைதி என்னும்  கனி தொங்குகிறது.- டெஸ்கார்டில்.
 • பழிவாங்குதல் என்பது அற்பர்கள்,அற்ப ஆனந்தம் கானும் செயலாகும்.
 • சிறப்பு என்பது பலத்தை சரியான வழியில் பயன்படுத்திக்கொள்வதில்தான் இருக்கிறது.
 • ஒவ்வொரு நாள் காலையும்,அந்த நாளை நல்ல நாளாக ஆக்குவதற்கான சந்தர்ப்பத்தை தருகிறது.
 • எல்லா நேரமும் நல்ல நேரம்தான்,அதில் எதை செய்து முடிக்கிறாய் என்பதுதான் கேள்வி.
 • மூளையால் சிந்திப்பவன் பாதி மனிதனே,இதயத்தால் சிந்திப்பவனே முழு மனிதன்.
 • செய்யத்தெரிந்தவன் சாதிக்கிறான்,செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
 • செயலை விதையுங்கள் பழக்கம் உருவாகும்,குணத்தை விதையுங்கள் உங்கள் எதிர்காலம் உருவாகும்.

     கடைசியா ஒரு தத்துவம் மக்கா..

”தண்ணி” அடிச்சா தகராறு ..வெண்ணீர் குடிச்சா நாம சுகம் பாஸு...!!!!

மேலும் சில தத்துவ பதிவுகள்:)

1.காதல் தத்து பித்துவங்கள்
2.தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயப்படாது...!!
4 Responses to “தன்னம்பிக்கை எனும் வெற்றியின் மந்திரம்.”

திண்டுக்கல் தனபாலன் said...
23 August 2012 at 12:54

நல்லதொரு தொகுப்பு...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

தொடருங்கள்... வாழத்துக்கள்...


லெக்ஷ்மி said...
23 August 2012 at 16:47

m super


stalin wesley said...
23 August 2012 at 20:45

அனைத்தும் தன்னம்பிக்கை வரிகள் !

பகிர்வுக்கு நன்றி சகோ


Kamalakkannan c said...
25 August 2012 at 10:52

நன்றி திண்டுக்கல்,லக்‌ஷ்மி,ஸ்டாலின்:)


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News