Sunday, 5 August 2012

நாட்டுப்புற பாடல்கள் - என்ன மானமுள்ள பொண்ணு என்னு மருதையில கேட்டாக.

நான் ரசித்த நாட்டுப்புற பாடல்


சின்ன பசங்க நாங்க படத்தில் வரும் ’என்ன மானமுள்ள பொண்ணு’ என்று ஆரம்பிக்கும் கிராமிய, நாட்டுபுற பாடலை விட சூப்பர் சிங்கரில் சிறுமி யாழினி பாடியது என்னை மிகவும் கவ்ர்ந்து விட்டது.

சிறுமி யாழினி அழகாக பாடுவதோடு பாடல் வரிகளுக்கேறப தன் முக பாவனைகளை மாற்றுவது சிறப்பானது.


அதிலும் குறிப்பாக ’மூக்கழக பார்த்து என்ன மூக்கையன் கோட்டையில் கேட்டாக’ என்ற வரிகள் வரும்போது பெண்மைக்கே உரிய வெட்கத்தோடு நம்மையும் வெட்கப்பட வைக்கிறார்.


’கோபமுள்ள பொன்னு’ வரிகளில் கோவத்தோடும், ‘பாசமுள்ள பொன்னு வரிகள் வரும்போது அப்படியே தன் குரலை மெலிதாக்கியும் அருமையாக பாடி இருக்கிறார்.

’இத்த்னை பேரும் சுத்தி வளைச்சும் உத்தம ராசா உன்ன நினைக்கும்’ வரிகளில் சந்தோசத்தை அப்ப்டியே முகத்தில் காட்டுகிறார்.

சமீபத்தில் யூ ட்யூபில் பார்த்த இப்பாடலை உங்களுடனும் பகிர்வதில் மகிழ்ச்சி.
மண் வாசனையை நேசிக்கும் அனைவருக்கும் இப்பாடல் மிகவும் பிடிக்கும்.பார்த்து ரசியுங்கள்.

நாட்டுப்புற பாடல் கீழே:)





இதே பாடல் Tamil record dance வடிவிலும் உள்ளது.இதையும் ஓரளவு ரசிக்கலாம்.



நன்றி:)

0 Responses to “நாட்டுப்புற பாடல்கள் - என்ன மானமுள்ள பொண்ணு என்னு மருதையில கேட்டாக.”

Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News