Sunday, 15 July 2012

பில்லா 2 திரை விமர்சனம்-Billa 2 Movie Review In Tamil

பில்லா 11(2) இரண்டு சினிமா விமர்சனம்- Billa 11(2) Film Review in Tamil

 

EVERY MAN HAS A PAST 

EVERY DON,A HISTORY

AJITH KUMAR IN BILLA 2(11) THE BEGINNING

BILLA 2(11) AJITH KUMAR
நடிகர்கள்:          அஜித்குமார்,பார்வதி      
ஓமனகுட்டன்

இயக்கம்:            சக்ரி டோலெட்டி 

இசை:                  யுவன் சங்கர் ராஜா 

ஒளிப்பதிவு:     ஆர்.டி.ராஜசேகர் 


 கையில் பைகளுடன் அகதிகள்.அகதிகளில்  ஒருவராக தல அஜித்.
விசாரணை அதிகாரியும் தல அஜித்தும்...விசாரணை அதிகாரி: உன் பேரு என்ன?
பில்லா(அரங்கம் கைத்தட்டலில் அதிர்கிறது)
எங்கேர்ந்து வர்ற?
கடல்லேர்ந்து..!
அப்பா?
அம்மா?
அப்ப அனாதையா?
இல்ல அக்கா இருக்காங்க.
எங்க?
மெட்ராஸ்ல
அட்ரஸ் சொல்லு?
தெரியாது...!
நீ தீவிரவாதியா?

தீவிரவாதிக்கும்,போராளிக்கும் ஒரே ஒரு வித்யாசம்தான்
ஜெயிக்கிர வரைக்கும் தீவிரவாதி,
ஜெயிச்சிட்டா போராளி.

என்று வசனம் பேசுகிறார்.              


வழக்கமாக எல்லா படங்களிலும் அனாதையாக வரும் நாயகர்கள் வேறு வழி இல்லாமல் எப்படி தடம் மாறி தீய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களோ அதுவேதான் இங்கேயும்.

மதுரை பொண்ணு பாடலின் போதே சரமாரி கத்தியால் குத்தி கொடுத்த பணத்துக்கு தன் வேலையை முடிக்கிறார் அஜித்.மதுரை பொண்ணு பாடலின் இசையை கேட்டபோது எங்கோ கேட்ட ஞாபகம், யோசித்ததில் ஜெண்டில்மேன் படத்தில் வரும்
ஒட்டகத்த கட்டிக்கோ பாடலில் இசையும் இதுவும் கிட்டத்தட்ட ஒன்றுபடுகிறது.parvathy omanakuttan billa 2 (11)
செல்வராஜ் அண்ணாச்சியிடம் கத்தை கத்தையாக பனம் வாங்கிக்கொண்டு கணக்கே இல்லாமல் சுட்டு அள்ளுகிறார்! பின்

அன்னாச்சியே முடியாது என்று சொன்ன ஒரு தங்க பிசினசை அஜித் முடித்து கொடுப்பதாக அன்னாச்சியின் நன்பரிடம் உறுதி அளிக்கிறார்.


அதற்கு அன்னாச்சி உன் துனிச்சல் நல்லாத்தான் இருக்கு ஆனா அதிகமா ஆசை படுறியோன்னு நினைக்கிறேன் என்கிறார்.அதற்கு அஜித்
ஆசை இல்ல அன்னாச்சி பசி என்கிறார்.

இதற்கிடையில் அஜித்தின் அக்கா மகளாக பார்வதி ஓமனக்குட்டன் ஒரு சர்ச் காட்சியில் வந்து போகிறார்.

வில்லன், பில்லா டேவிட் அஜித்திடம் தன் கேர்ள் ஃப்ரண்டை அறிமுகம் செய்கிறார்.வெளங்குமாயா..!!! இருவர் பார்வையிலும் கோணல்கள்..!!!

 நாயகனின்  அக்கா இறந்துபோக அக்காவின்  மகளை தன் வீட்டில் தங்க வைக்கிறார் அஜித்.

வில்லன் கூட்டத்துல எவனாவது கொஞ்சம் சொங்கியா இருந்தா அவன போட்டுத்தள்ளிட்டு பயம் காட்டுற இந்த லாஜிக்க மாத்தவே மாட்டீங்களா இயக்குனர்களே!!!! சேம் சேம் காப்பி சேம்...!!! parvathy omanakuttan billa 2 (11)

 பில்லா theme music ஒலிக்கும்போதெல்லாம் அரங்கம் விசிலுடன் அதிரும் அதே வேளையில் ,பழைய பில்லா அளவுக்கு பில்லா இரண்டு இல்லையே என்றும் நினைக்க தோன்றுகிறது.

உனக்குள்ளே மிருகம் என்ற விறுவிறுப்பான அதிரடி பாடல் முடிவதற்குள்ளையே பல டீல்களை முடித்து பெரிய டான் ஆக மாறுகிறார் நாயகன் அஜீத்..!!!!

முதல்வரை போட்டுத்தள்ளுது ஒரு கும்பல்,அந்த பழியை அஜித் மேல போடுது வில்லன் கும்பல்.கோர்ட்ல ஜட்ஜ் குடும்ப போட்டோவை காட்டி நீதிபதியையே மிரட்டி ஜாமீன் வாங்கிடறாரு நம்ம தல..!!!

அப்ரம் ஆயுதம் கடத்துறாரு பார்க்குறதையெல்லாம் அடிச்சி நொறுக்குறாரு,கண்டவனையெல்லாம் கண்ட இடத்துலையே கதைய முடிக்கிறாரு. படத்துல துப்பாக்கி குண்டு சத்தம் தான் அதிகமா இருக்கும் போல!!!

பார்வதி ஓமனக்குட்டனுக்கு ஒரு வேளையும் இல்ல...பைங்கிளி நாலே நாலு சீன்ல நறுக்குன்னு டூ பீஸ்ல பசங்க மனசுல நஞ்ச விதைச்சுட்டு போய்கிட்டே இருக்கு..!!!

இதுக்கு பேர் ஹீரோயினாயா?

சரி படத்துல கதை என்ன அதை சொல்லுங்க?அதான கேக்குறீங்க... நானும் அப்டித்தான் நினைச்சிகிட்டு  இருந்தப்ப
அஜித்கிட்ட ரஞ்சித் கேக்குராரு...

நினைச்சதெல்லாம் முடிச்சிட்டல்ல....
இல்ல...
இதுதான் ஆரம்பம்னு  நம்ம தல சொல்ல


படத்தையே முடிச்சிட்டாங்க்யா......:))


ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வருகிறது.ஆனால் எந்த படமும் முதல் பாகத்தின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.இதன் கடைசியில் இன்று பில்லா 2 நாளை???

                                                Billa Video Review
பில்லா இரண்டு மொத்தத்தில் பில்லாவின் இரண்டாம் தரம் . நன்றி மீண்டும் சந்திப்போம்:))

1 Responses to “பில்லா 2 திரை விமர்சனம்-Billa 2 Movie Review In Tamil”

ibragadeesh said...
15 July 2012 at 07:30

chakri toilet wasted our thala mass movie


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News