Sunday, 3 June 2012

நீயா நானா கோபிநாத் vs பவர் ஸ்டார்- Neeya Naana Gopinath vs Power star

நீயா நானா கோபிநாத் வீழ்ச்சியும்-பவர் ஸ்டார் எழுச்சியும்


Neeya naana Gopinath vs Power star
நீயா நானா கோபிநாத் தன் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் எனற பாணியில நிகழ்ச்சியை நடத்தக்கூடியவர். நம் அனைவருக்குமே ஒவ்வொரு விடயங்களை பற்றியும் வெவ்வேறான எண்ணங்கள் இருக்கும்.ஆனால் கோபிநாத் தான் நினைப்பதே சரி என நினைத்து அவரின் எண்ணங்களுக்கு ஏற்புடையவர்களையே நிகழ்ச்சியின் விருந்தினராக அழைத்து கோபியின் எண்ணங்கள்தான் சரி என்பதுபோல நிகழ்ச்சியை முடித்துவிடுவார்.

அதுமட்டுமில்லாது நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் கோபியின் கருத்துக்கு ஒத்த கருத்துடையவர்களிடம் மட்டுமே திரும்ப திரும்ப கேள்விகளை கேட்பார் மைக் கொடுத்து பேச வாய்ப்பளிப்பார்.எதிர் கருத்துடையவர்களுக்கு வாய்ப்பு குறைவாகவே இருக்கும்!!!


கடந்த ஞாயிறு அன்று வழக்கம்போல ஒரு த்லைப்பை எடுத்து வந்தார்.அதாவது போலி கவுரவம் பற்றிய தலைப்பு அது.அதில் பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

பவர்ஸ்டார் சீனிவாசன் அவர்களை நானும் கிண்டல் அடித்திருக்கிறேன்.ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் பேசியதை கேட்ட பிறகு அவர் செய்வதில் என்ன தவறு இருக்கிறது என்று தோன்றுகிறது. நன்றி நீயா நானா கோபிநாத் அவர்களே!!!

நான் உனக்கு நல்லது செய்கிறேன் உங்கள் போலி முகத்தை உடைக்க முயற்சிக்கிறேன் என்ற பெயரில் சரமாரியாக பவர்ஸ்டாரின் மேல் தாக்குதல் நடத்தினார்.

தாக்குதல் ஒன்று:-

உங்களை யார் என்றே தெரியாது என்கிறார் கோபிநாத் !!!
திருவாளர் கோபி அவர்களே யார் என்றே தெரியாதவரை எப்படி சிறப்பு விருந்தினராக அழைத்தீர்கள்.இதுதான் உங்கள் போலி கவுரவம் என்று தெளிவாக காட்டுகிறது.

தாக்குதல் இரண்டு:-

எதற்கு கேமராவுடன் 11 பேர் கொண்ட குழுவாக வருகிறீர்கள் என்கிறார் கோபி??

ஏன் சார் நீங்க எங்க போனாலும் தனி ஆளாதான் போவீங்களா??? உங்களுக்கு இடைஞ்சல் ஏதாவது இருந்தால் அதை தனிப்பட்ட முறையில் அவரிடம் சொல்லியிருக்க வேண்டும்.அதை விட்டு விட்டு பொது நிகழ்ச்சி ஒன்றில் இப்படி வெளிப்படையாக அவமானப்படுத்துவது சரியா???அல்லது எல்லா பிரபலங்களும் உங்கள் ஸ்டுடியோவிற்கு தனியாகத்தான் வருகிறார்களா???
மேலும் அவர் செல்லும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் உண்மையாகவே வீடியோ எடுத்து பலர் அதை யூ ட்யூப் வழியாக வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை ஈர்க்கிறார்கள்.இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா???

தாக்குதல் மூன்று:-

நீங்கள் டாக்டராகவே இருந்திருக்கலாமே எதற்கு நடிக்க வந்தீர்கள்? இது என்ன கேள்வி என்றே புரியவில்லை.எல்லோரும் பனம் புகழை தேடித்தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.அவ்ருக்கு பிடித்ததைஅவர் செய்கிறார்.அவர் நடித்த படத்தை பார்த்தே ஆக வேண்டும் என யாரையாவது கட்டாயப்படுத்தினாரா? அல்லது உங்களிடம் எதாவது உதவி வேண்டும் என கையேந்தி நின்றாரா?? நீங்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதற்காகவே இப்படி எல்லாம் கேட்டு விட முடியுமா??

ஏன் நீங்கள் கூடத்தான் வீடு வீடாக தெரு தெருவாக துணிகளை விற்றுள்ளீர்கள்.எல்லா தொழிலும் நல்ல தொழிலே அப்படி இருக்க எதற்கு தொகுப்பாளராக வந்தீர்கள்?

இதே கேள்வியை ஒரு ரஜினியிடமோ,ரித்தீஸிடமோ கேட்க உங்களுக்கு தைரியம் உண்டா?

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பதுப்போல உங்கள் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ஒரு பவர்ஸ்டார் தேவைப்பட்டார்.காரியத்தை கச்சிதமாக முடித்து விட்டீர்கள்.

போலி கவுரவம் பற்றி பேசும்போது கூட தமிழன்,தமிழ்,கலை,கலாச்சாரம் என அளக்காமல் கதை விடும் நீங்கள் கோட் சூட் போட்டு படம் காட்டுகிறீர்கள்.இது போலி கவுரவம் இல்லையா??

உங்களைப்பற்றி கூடத்தான் வதந்திகளோ? உண்மையோ?.. ஏராளாமான குற்றச்சாட்டுக்கள் வருகின்றன அதையெல்லாம் பொது மேடையில் சொன்னால் சும்மா இருந்துவிடுவீர்களா???

இன்னொரு விருந்தினராக வந்திருந்த செல்வ புவியரசு என்பவர் கோபி ஏற்பாடு செய்த ஆள் போலவே பேசினார்.பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு கலை குறித்த அடிப்படை அறிவே இல்லை என்று சொன்ன புவியரசு தன் அசிங்கத்தை தானே வெளிப்படுத்திக்கொண்டார்.

அத்தனை தாக்குதல்களுக்கும் பவர்ஸ்டார் கன்னியமாகவே பதில் அளித்தார்.முதலில் போலி கவுரவம் வேண்டாம் என்று சொன்னவர் பின் போலி கவுரவம் வேண்டும் என முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிந்தோ தெரியாமலோ அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோபிநாத் வெற்றி பெற்றிருக்கலாம்.ஆனால் இந்த நிகழ்ச்சிக்குபிறகு மக்கள் மனதில் வெற்றி பெற்றவர் என்னவோ பவர்ஸ்டார்தான் .இதை யூ ட்யூப் வீடியோக்களில் வரும் கருத்துக்கள் மற்றும் இணையத்தள கருத்துக்கள் தெளிவாகவே காட்டுகிறது.பவர் ஸ்டார்க்கும் காலம் வரும்:))

பவர்ஸ்டார் குறித்து எனது கருத்து:-

பவர் ஸ்டாரின் பேச்சை கேட்கும்போதெல்லாம் என் நண்பன் ஒருவன் ஞாபகம்தான் வரும் உதாரணமாக நான் ஒரு டீ 50 ரூபாய்க்கு குடித்தேன் என்று சொன்னால் அவர் 100 ரூபாய்க்கு எங்கோ குடித்ததாக கதை விடுவான்.இது எல்லா விசயத்திலும் தொடரும்.இப்படிப்பட்டவர்கள் தங்களை ஹீரோவாக நினைத்து தன்னை எல்லாவற்றிலும் மிகைப்படுத்தி காட்டுபவர்கள்.அப்படிப்பட்டவர்களால் நமக்கு இடையூறு எதுவும் ஏற்படாதவரை பிரச்சினை இல்லை.

அந்த நிகழ்ச்சியை பாருங்கள்



இணையம் வழியாக கண்டித்தவர்கள்

அட்ராசக்க ADRASAKA செந்தில்குமார்,  அனுபவிராஜா,  என் ராஜபாட்டை வெங்காயம், ,  சசீ,   எண்ணங்களுக்குள் நான் ,இன்னும் நிறைய...

இவர் வீடியோ வழி கண்டனங்களை தெரிவித்துள்ளார்.



யூ ட்யூப் வழி கண்டனங்கள். 

எதிர்ப்பதாலோ கண்டனம் தெரிவிப்பதாலோ நீயா நானா பார்ப்பது குறைந்துவிடப்போவதில்லை ஏனெனில் அதன் வெற்றி நடத்துவரை விட பங்கேறபவர்களையே பெரிதும் சார்ந்து இருக்கிறது. ஆனால் மக்கள் மனதில் பவர்ஸ்டாரின் மதிப்பு இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு ஒருபடி உயர்ந்துள்ளது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை நன்றி:))

3 Responses to “நீயா நானா கோபிநாத் vs பவர் ஸ்டார்- Neeya Naana Gopinath vs Power star”

ibragadeesh said...
4 June 2012 at 16:50

Shame on you Gopinaath. Just for your TRP rating, you should not make fun of anyone (that too a doctor come actor), that too in front of public.


ibragadeesh said...
4 June 2012 at 16:51

Gopi's behaviour and speech indeed brings him down pitiable. I have seen many gopi's show but this was the one which which makes him horrible. As a media person, gopi should first learn how to treat a guest. It seems like a planned one to make fun of with Mr.Srinivasan.


ரஹீம் கஸாலி said...
4 June 2012 at 18:33

அருமை...இதுகுறித்து என் பதிவு
http://www.rahimgazzali.com/2012/05/thanks-to-neeyaa-naanaa-gopinaath.html
பவர்ஸ்டாரை அவமானப்படுத்திய கோபிநாத்திற்கு நன்றி.........


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News