Saturday, 3 December 2011

போராளி திரை விமர்சனம் - Poraali Movie Review In Tamil

போராளி திரை விமர்சனம்- Poraali Movie Review In Tamil




சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார்,அல்லாரி நரேஷ்,சுவாதி,கஞ்சா கருப்பு,சூரி நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் போராளி.சமுத்திரக்கனி,சசிக்குமார் கூட்டணி ஏற்கனவே சுப்ரமணியபுரம், நாடோடிகள் என இரு பெரும் ஹிட் படங்களை கொடுத்திருப்பதால் இப்படம் பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளானது.


பயம்,சந்தேகம்,பதற்றம்,ஏமாற்றம்,ஏக்கம்,வலி,வேதனை இப்டி ஏதாவது ஒன்றோடு  நம் கூடவே வாழ்ந்து வரும் ஒவ்வொரு மனிதனும் மனதளவில் போராளி கள் தான் அப்டிங்கிறதுதான் படத்தின் சுருக்கம்.


நண்பர்களான சசிகுமாரும், நரேசும் புதிய வீட்டுக்கு குடி வருகிறார்கள்.அங்குள்ளவர்களின் சில பிரச்சினைகளை தீர்த்துவைத்து அவர்களின் பாராட்டை பெறுகிறார்கள்.பெட்ரோல் பங்கில் இருவருக்கும் வேலை கிடைக்கிறது.அதோடு சேர்த்து பிள்ளையார் கட்டண சேவை என்ற சிறிய நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்கள்.



சசிகுமாரும்,சுவாதியும் ஒரு காட்சியில்

சசி: பாட்டி பாட்டின்றியே அப்பன பெத்ததா?ஆத்தா பெத்ததா?
சுவாதி:அதுவும் என்ன மாதிரிதான்
சசி:அப்டினனா?
சுவாதி:எனக்கு யாரும் இல்ல.
சசி:என்னாச்சு
சுவாதி:ஆமா அப்டித்தான்
சசி:அதான் பயம் ,யார பார்த்தாலும். பாதுகாப்பில்லாத உணர்வு.எல்லாரும் உன்ன மாதிரிதான் சொந்த பந்தமெல்லாம் சும்மா பாதியிலேயே விட்டுட்டு ஓடிடுவாய்ங்க..தைரியமா இரு என்ன..!

இந்த காட்சியில் சுவாதியின் மனதோடு நெருக்கமாகி  உள்ளத்தை தொட்டுவிடுகிறார் சசிகுமார்.அடுத்த காட்சியிலேயே சுவாதி காதலை சொல்கிறார்.முதலில் மறுத்தாலும் அடுத்தடுத்த காட்சிகளில் சசிகுமாரும் காதல் வயப்படுகிறார்.இதற்கிடையில் சசியும், நரேசும் ஏற்கனவே மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரிய வருகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதி கதை.





சசி , நரேஷ் நடிப்பு அருமை.கஞ்சா கருப்பும்,சூரியும் சிரிக்க வைக்கிறார்கள்.பாடல்கள் சுமார் ரகம்.

 சுவாதி வாவ்!!! 
ஒல்லிக்குச்சி உடம்புக்காரி,சிரித்து கொல்லும் பல்லுக்காரி

கவர்ச்சியையும்,உடலையும் காட்டி நடிக்கும் நடிகைகளையெல்லாம் நீண்ட நாள் ரசிக்க முடியாது...சுவாதி போன்ற நடிகைகளை எத்தனை நாட்கள் ஆனாலும் ரசிக்கலாம்
.
பிடித்த சில பஞ்ச், தத்துவம், வசனம்...
  • படிச்சவனுக்கு ஒரு வேலை படிக்காதவனுக்கு பார்த்ததெல்லாம் வேலை
  •  நீ தோத்தவன பாக்குற பயப்படுற ,நாங்க ஜெயிச்சவன் பாக்குறோம் தைரியமா இருக்குறோம்
  • உன்ன மாதிரி ஆளுங்க எத பார்த்தாலும் நொட்ட சொல் மட்டும் சொல்லுங்க,வேற எந்த முயற்சியும் எடுக்காதீங்க
  • உடம்புக்கு வர்ற பிரச்சினையை சாதாரணமா பார்க்குற மனுசங்க மனசுக்கு வர்ற பிரச்சினையை அப்டி பாக்குறது இல்ல..கொஞ்சம் தள்ளிவச்சுதான் பாக்குறாங்க.
  •  நம்ம பார்வையில அவன் பைத்தியக்காரன்,அவன் பார்வையில நம்ம எல்லாருமே பைத்தியக்காரன்
  • பயம்.பதற்றம்,ஏமாற்றம்,பரபரப்பு,ஏக்கம்,வலி,வேதனையோட எல்லாரும் நம்ம பக்கத்துலேயேதான் இருக்காங்க நாமதான் யாரையும் கண்டுக்குறதே இல்ல.
  •  
    மொத்தத்தில் போராளியை ஒருமுறை தாராளமாக பார்க்கலாம்:)
     நன்றி மீண்டும் சந்திப்போம்.

7 Responses to “போராளி திரை விமர்சனம் - Poraali Movie Review In Tamil”

மதுமதி said...
4 December 2011 at 17:38

படம் பார்த்ததைப் போல இருந்தது..


மழை said...
4 December 2011 at 17:57

மிக்க நன்றி மதுமதி :)


Jaikumar said...
6 December 2011 at 06:06

Nanbenda


சி.பி.செந்தில்குமார் said...
7 December 2011 at 08:27

நான் ஓட்டு மொத்தத்தையும் போட்டுட்டேன்..ஹா...ஹா..


மழை said...
7 December 2011 at 19:22

Nanbenda///
நண்பேண்டா:)


மழை said...
7 December 2011 at 19:23

நான் ஓட்டு மொத்தத்தையும் போட்டுட்டேன்..ஹா...ஹா..///

மொத்த ஓட்டும்னாஎன்ன கள்ள ஓட்டா?ஹிஹி நன்றி:)


rara said...
19 December 2011 at 21:26

படம் எனக்குப் பிடித்திருந்தது...குறிப்பாக எஸ்.ஆர்.கதிரின்
ஒளிப்பதிவு சூப்பர்...


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News