Monday, 12 December 2011
அன்பே சகியே என்னை ஆள வந்த ரதி நீயே-Anbe Sagiye by Dhilip Varman
அன்பே சகியே எனை ஆள வந்த ரதி நீயே-Anbe Sagiye Song-Lyrics by Dhilip Varman
மலேசிய பாடகர் திலீப் வர்மன் பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டதால் மீண்டும் அவர்தம் புகழை நானே தொடர்ந்து பாடாமல் சற்று வித்யாசமாக யூ ட்யூபில் புகழ் பாடியவர்களின் கருத்துக்களை இங்கு பதிகிறேன்.
இப்பாடல் உங்கள் மனதை நிச்சயம் கொள்ளையடிக்கும் என்பதில் எனக்கு ஐயம் ஏதுமில்லை.
பாடல்:திலிப் வர்மன்
இசை:பூமராங்
நீ குழாயில்(You tube) ரசித்து ருசித்த உள்ளங்கள் கூறிய கருத்துக்கள் அப்படியே ...
| YOU TUBE COMMENTS |
| வாவ் பாடல்களின் சொல்வீச்சை கேட்டவுடன் மனதுக்குள் ஓர் வலி.
எத்தனை வைரமுத்துக்கள், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மற்றும் கண்ணதாசன்கள்
இன்னும் வெளியுலகத்திற்கு தெரியாமல் இருக்கிறார்கள் என்று. இந்த
இணையத்தளங்களுக்கு உங்கள் சார்பாகவும் என் சார்பாகவும் பல கோடி நன்றிகள்.
உங்கள் திறன் மேலும் பண்மடங்கு வளர வாழ்த்துக்கள். . . IMRAJAJITH 3 months ago
alan6469
6 months ago
dhilip varman valga plz add to songs hello tunes thn intha songs ku ethana kodinalum kodukkalam
sheiksameem22
3 months ago
All Dilip's song very nice............. interested to know who is the writer
premla19
5 months ago
Hi Guys this song is written by Coco Nantha and the
beautiful music was composed by Malaysia's best composer Sundrra
Sir...it was sung by Dilip with Boomerangx for Boomerangx's second album
"Satriya Samrajyem".
@vannathupoochigal :Uploaders Plsss acknowledge the creators too.The credit should goes to them first.......Thanks.
vanaja4176
2 weeks ago
forever dhilip song..........
viviyan1218
3 weeks ago
in playlist dhilip varman
Dilip this is RJ Sujatha, I really really Love ur Voice & Am fall in love with u...
SujaaRAam
8 months ago
bruv im so proud to be a TAMIL luv ur song so much i wil sing it 2 my girl
MrDushan89
9 months ago
|
Anbe Sagiye Lyrics-அன்பே சகியே பாடல் வரிகள்
அன்பே சகியே...எனை ஆள வந்த ரதியே
அன்பே சகியே
நெஞ்சில் நீந்துகின்ற நைல் நதியே
புயல் கடலிலே மையம் கொண்டதால்
நீர் மெல்ல மெல்ல மேல் எழும்புதே
காதல் என்னுள்ளே மையம் கொண்டதால்
நான் மெல்ல மெல்ல மேல் எழுகிறேன்
உன் பார்வை தந்த சாபத்தினால்
பிரணவாயு காற்றில் தீர்ந்ததடி
உன் மௌனம் தீட்டிய ஜாலத்தினால்
ஒரு வார்த்தை சொல்ல எண்ணுயிர் கசியுதே
(அன்பே சகியே)
இரு விழியில் தோன்றிய காதல்
கைகளிலிருந்து கலைவது ஏனோ?
இரு மனங்களில் வசிக்கிற காதல்
இரு திசைகள் இன்று பிரிந்தது ஏனோ?
ஒரு முறை உன்னை பார்த்ததும் காதல்
ஒரு கணத்தில் தோற்றது ஏனோ?
ஒரு மொழியில் வாழ்ந்தது காதல்
ஒரு பிழையில் கால் சரிந்தது ஏனோ?
வெள்ளி நிலவில் ஒளிதான் காதல்
தேய்பிறையில் ஒழிந்தது ஏனோ?
இதயம் இதயம் வலிக்கிறதே...
மழை துளியில் உந்தன் முகம் தெரிகிறதே
அதை சேமிப்பேன் உள்ளங்க் கையிலே
வெயில் பட்டு தரையில் நிழல் வீழ்குமுன்
உடன் பட்டு உனை நிதமும் தாங்குவேன்
யார் தீண்டினால் தீ மூழுமோ
காதல் தீண்ட தீண்ட தீ நீழுமோ
உயிரும் உயிரும் உருகியதே
ஊடுருவி இரவில் கரைகிறதே
அன்பே நீ நானாகிறாய்
ஒன்று சொல்லி விட்டு போ போ
சொல்லி விட்டு போ போ
நீ போ போ போ
ரெண்டுக்கு புகுந்து நிறம் தந்தாள்
கல்லுக்குள் புகுந்து சிலை தந்தாள்
சொல்லுக்குள் புகுந்து மொழி தந்தாள்
இறைவனை போல் மறைந்துக் கொண்டாள்
ஒன்று சொல்லி விட்டு போ போ
சொல்லி விட்டு போ போ
நீ போ போ போ
இனத்துக்குள் புகுந்து கவி தந்தாள்
இரவுக்குள் புகுந்து ஒளி தந்தாள்
நிறத்துக்குள் புகுந்து பை தந்தாள்
மனதுக்கு மட்டும் வலி தந்தாள்
தனித்தீவின் அலைகளில் நீதான்
நீதானே நான்
நான் அங்கு வேண்டும்
கடல் நீரில் விழித்திட கூடும்
புயல் கடலிலே மையம் கொண்டதால்
நீர் மெல்ல மெல்ல மேல் எழும்புதே
காதல் என்னுள்ளே மையம் கொண்டதால்
நான் மெல்ல மெல்ல மேல் எழுகிறேன்
உன் பார்வை தந்த சாபத்தினால்
பிரணவாயு காற்றில் தீர்ந்ததடி
உன் மௌனம் தீட்டிய ஜாலத்தினால்
ஒரு வார்த்தை சொல்ல என்னுயிர் கசியுதே
(அன்பே சகியே)
1 Responses to “அன்பே சகியே என்னை ஆள வந்த ரதி நீயே-Anbe Sagiye by Dhilip Varman”
- இராஜராஜேஸ்வரி said...
-
மழை துளியில் உந்தன் முகம் தெரிகிறதே
அதை சேமிப்பேன் உள்ளங்க் கையிலே
வெயில் பட்டு தரையில் நிழல் வீழ்குமுன்
உடன் பட்டு உனை நிதமும் தாங்குவேன்
மனம் நிறைந்த மழைக்குப் பாராட்டுக்கள்.. -
13 December 2011 16:42
Subscribe to:
Post Comments (Atom)

if u ever experienced true love this song wud definitely make u cry ....