Monday, 14 November 2011

பொன்.சுதாவின் இது நடந்த கதை-குறும்படம்-Tamil Short Films

தமிழ் குறும்படம்-குறும்படங்கள்-Tamil Short Films

 பொன்.சுதா மறைபொருள் குறும்படத்தின் மூலம் ஏராளமான முஸ்லீம்களின் கோபங்களை வாங்கி கட்டி கொண்டவர்.

முஸ்லீம் பெண்களின் நியாயமான ஆசைகளை அந்த மதத்தின் கோட்பாடுகள் கட்டிப்போடுகிறது என்பதே மறைபொருள் சொன்ன கருத்து. 6 நிமிடங்கள் மெளனமாகவே ஒடும் மறைபொருள் சொல்ல வேண்டியதை தெளிவாகவே சொல்லி சென்றது.
மற்ற பெண்கள் எல்லாம் வித விதமாக உடையணிவதை பார்க்கும்போது,என்றாவது ஒரு நாள் அல்லது ஒரு நிமிடம் கூட அந்த உடையின் மேல் ஈர்ப்பு,ஆசை ஏற்படாமலா இருக்கும் என்பதும் கேள்விக்குறியான ஒன்றுதான்
ஏராளமான எதிர்மறை கருத்துக்களுடன் மறைபொருள் குறும்படம் யூ ட்யூபில் மெகா ஹிட் அடித்துள்ளது .இது மிகவும் சென்சிடிவான விசயம் என்பதால் இதை இத்துடன் விட்டு விடுவோம்.


மறைபொருள் குறும்படத்தை பார்க்காதவர்கள் கீழே சொடுக்கி பாருங்கள்.

மறைபொருள் குறும்படம்.

முதல் படைப்பில் மதத்தை கையில் எடுத்தவர் இப்போது ஜாதியை கையில் எடுத்துள்ளார்.ஆம் மீண்டும் தன் இரண்டாவது குறும்பட படைப்பை நடந்த கதை என்ற பெயரில் சில தினங்களுக்கு முன் பொன்.சுதா அவர்கள் வெளியிட்டுள்ளார்.

எல்லா கிராமங்களிலும் இருக்கும் மேல்சாதி(மேலத்தெரு),கீழ் சாதி(கீழத்தெரு) யின் செருப்பு கதை:) அதாவது கீழ் ஜாதிகாரர்கள் செருப்பு அணியக்கூடாதென அதிகாரம் செய்கிறது மேல்சாதி கூட்டம்.அதை எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை.

இது நடந்த கதையோ மிகைப்படுத்தப்பட்ட கதையோ? பார்க்க நன்றாகவே இருக்கிறது!

பொன்.சுதா அவர்களுக்கு,

1.மொபைல் கேமராவில் எடுத்ததுபோல் படம் தெளிவில்லாமல் இருக்கிறது.

2.படத்தின் இறுதியில் ஒரு வசனம் வருகிறதே”காக்கா குருவி போல சுட்டு புடுவேன்” என்று இது எந்த ஊர் சட்டம் சார்?...சுட்டுட்டா உங்கள சும்மா விடுவாங்களா?...தேவையில்லாத, மிகைப்படுத்தப்பட்ட, இந்த சினிமா பானி வசனத்தை தவிர்த்து இருக்கலாம்.

3.மற்றபடி குறும்படம் நன்று.

ஜாதிகளை அழிக்கும் சக்தி கல்வியறிவுக்கு மட்டுமே உண்டு.ஒருவன் கல்வியறிவு பெற்றுவிட்டால் பொருளாதாரத்திலும் வளர்ந்து விடுகிறான்.அனைவருக்கும் க்ல்வி என்பதே ஜாதிகளை கூண்டோடு அழிக்கும் சக்தி.ஆகையால் கல்வியறிவு பெறுவோம்.மனிதராய் வாழ்வோம்.

நடந்த கதை குறும்படம் கீழே:

7 Responses to “பொன்.சுதாவின் இது நடந்த கதை-குறும்படம்-Tamil Short Films”

பொன் சுதா said...
15 November 2011 at 10:43

நடந்த கதையை தரமான பதிப்பாக ஏற்றியுள்ளேன்.

http://www.youtube.com/watch?v=H7Pja1ujH9Y

இந்த இணைப்பில் காணலாம். மொபைல் போனில் எடுக்கப் பட்டதல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த இணைப்பை பயன்படுத்துங்கள்.


பொன் சுதா said...
15 November 2011 at 10:52

அப்புறம் தோழா...

கடைசியில் கதைநாயகன் பேசும் வசனம்.

60 ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் சூழல் அது.

சாதி வெறி கோலோச்சிய காலம்.

அவன் செய்வது ஊருக்குள் முதல் புரட்சி. எதற்கும் துணிந்ததால் மட்டுமே அவன் அந்தத் தெருவில் ஓடினான்.

வெட்டிவிடுவேன் என்று ஆதிக்க சாதியினர் மிரட்டும் போது.

தனது அதிகாரத்தை நினைவூட்டுகிறான்.

சுடுவேன் என்பது சினிமா ஆகிவிடுமா?

அவன் இராணுவ வீரன். துப்பாக்கியை அறிந்தவன்.

அவனது அந்த பயமுறுத்தலில் தான் ஆதிக்க சாதியினர் அவனது காலணி அணிந்த தலித் பாதங்களை அனுமதித்தார்கள்.

இது என் தரப்பிலான சிறு விளக்கம்.

தங்களது விமர்சனத்திற்கும். அறிமுகத்திற்கும், அக்கறைக்கும் பெரும் நன்றிகள் தோழர்.


பொன் சுதா said...
15 November 2011 at 10:57

http://www.youtube.com/watch?v=H7Pja1ujH9Y

நடந்த கதையின் தரமான பதிப்பை இந்த இணைப்பில் காணலாம்.

இந்த இணைப்பை பயன்படுத்துங்கள். நன்றி.


ரெவெரி said...
15 November 2011 at 19:58

வித்தியாசமான இரு படைப்புகள்...சமூக அக்கறையோடு...கத்தியின் விளிம்பில் பயணித்து...


மழை said...
16 November 2011 at 18:59

நடந்த கதையை தரமான பதிப்பாக ஏற்றியுள்ளேன்.

http://www.youtube.com/watch?v=H7Pja1ujH9Y

இந்த இணைப்பில் காணலாம். மொபைல் போனில் எடுக்கப் பட்டதல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த இணைப்பை பயன்படுத்துங்கள்.///

தரமான பதிப்பை வெளியிட்டதற்கு மிக்க நன்றி :)


மழை said...
16 November 2011 at 19:00

அப்புறம் தோழா...

கடைசியில் கதைநாயகன் பேசும் வசனம்.

60 ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் சூழல் அது.

சாதி வெறி கோலோச்சிய காலம்.

அவன் செய்வது ஊருக்குள் முதல் புரட்சி. எதற்கும் துணிந்ததால் மட்டுமே அவன் அந்தத் தெருவில் ஓடினான்.

வெட்டிவிடுவேன் என்று ஆதிக்க சாதியினர் மிரட்டும் போது.

தனது அதிகாரத்தை நினைவூட்டுகிறான்.

சுடுவேன் என்பது சினிமா ஆகிவிடுமா?

அவன் இராணுவ வீரன். துப்பாக்கியை அறிந்தவன்.

அவனது அந்த பயமுறுத்தலில் தான் ஆதிக்க சாதியினர் அவனது காலணி அணிந்த தலித் பாதங்களை அனுமதித்தார்கள்.

இது என் தரப்பிலான சிறு விளக்கம்.

தங்களது விமர்சனத்திற்கும். அறிமுகத்திற்கும், அக்கறைக்கும் பெரும் நன்றிகள் தோழர்.///


தங்கள் விளக்கத்திற்கும்,வருகைக்கும் மிக்க நன்றி திரு பொன்.சுதா அவர்களே:)


மழை said...
16 November 2011 at 19:01

வித்தியாசமான இரு படைப்புகள்...சமூக அக்கறையோடு...கத்தியின் விளிம்பில் பயணித்து..///

வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி ரெவரி:)


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News