Saturday, 12 November 2011

இதயமே இதயமே என்னை மறந்தது ஏன்?-காதல் சோக பாடல்கள்-Tamil Love Sad Songs

சோக காதல் கவிதைகள்-சோக பாடல்கள்-சோகமான காதல் கவிதைகள்-Tamil Love Sad Songs



முன்பு உயிரை தொலைத்தேன் பாடலும், பாடல் வரிகளும் ஒரு ஆணின் காதல் வலிகளை அபரிமிதமாக வெளிப்படுத்தியிருந்ததை உணர்ந்து இருப்பீர்கள்.

இப்பாடல் ஒரு பெண்ணின் காதல் வலிகளை சொல்கிறது. நான் மிகவும் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று.தவறாமல் கேளுங்கள்.ஒருமுறை கேட்டால் நிச்சயம் திரும்பவும் ரசிக்க வைக்கும் பாடலின் குரலும் அதன் இசையும்.


இப்பாடலை பாடியவர் சின்மயியா? ஸ்ரேயா கோஷலா என சந்தேகமாக உள்ளது.தெரிந்தவர்கள் கருத்துரையில் சொல்லுங்களேன்!!!  இசை இளையராஜா என்று நினைக்கிறேன்.


பாடல் வரிகள்

இதயமே இதயமே என்னை மறந்தது ஏன் ?
பிரிவெனும் துயரிலே என்னை தள்ளியதேன் ???
உன் பெயர் சொல்லி நான் பைத்தியம் ஆனேன் ...
நிழல் என தொடர்ந்தேன் அதை நீ அறிவாயோ?
நிழல் தர நீ இங்கு வருவாயோ?

இதயமே இதயமே என்னை மறந்தது ஏன் ...

பொன்னை போல் பூவை போல் உன்னை
சூடி கொண்ட நான் இன்று வாடி கிடப்பதோ?
பிரிவிங்கே உண்மை தான் என்றால்
உறவு ஏனையா? வாழ்வது கனவு பூமியா?

பாதைகள் இல்லை என்றால் பயணங்கள் போவதோ?
நம் குற்றம் என்ன ஏதோ தெய்வத்தை நோவதோ !!!
யாரிடம் என்ன சொல்வது
இனி சேரும் இடம் இங்கு வேறெது ...

இதயமே இதயமே என்னை மறந்தது ஏன் ...

எங்கோ நீ இருக்கின்றாய் என்றே உள்ளம் சொல்லுதே
அதில் என் உயிரும் உள்ளதே
கண்ணுக்குள் தூங்கிடும் கங்கை கன்னம் இறங்குதே
அதுவும் உன்னை தேடுதே

நீ பார்த்த நிலவு இங்கே நீ எங்கே தெய்வமே
வாராமல் நீ இருந்தால் வாழ்வேது நெஞ்சமே

கூவிடும் குயில் வாடுது ஒரு கூண்டு எங்கே இது நியாயமோ?

எனக்கு பிடித்த பாடலை உங்களுடன் பகிர்ந்ததில் மகிழ்ச்சி.
நன்றி மீண்டும் சந்திப்போம்:)


5 Responses to “இதயமே இதயமே என்னை மறந்தது ஏன்?-காதல் சோக பாடல்கள்-Tamil Love Sad Songs”

Jaikumar said...
23 December 2011 at 17:53

Super song nanba intha padalai padiyathu chinmai


பிரிவையும்-நேசிப்பவள் said...
25 January 2012 at 01:42

nice song


va said...
2 June 2012 at 15:10

suoer songs


prabha covai said...
6 August 2012 at 15:41

sema feel nanba


ஸ்ரீதர் said...
22 February 2013 at 01:42

ராகதேவனின் இசையில்....இப்பாடலை பாடியவர் Shreya Ghoshal

படம் : ஜூலி கணபதி


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News