Sunday, 27 November 2011

மயக்கம் என்ன திரை விமர்சனம்-Mayakkam Enna Movie Review In Tamil

மயக்கம் என்ன திரை விமர்சனம்-Mayakkam Enna Movie Review In Tamilநடிகர்கள்:தனுஷ்,ரிச்சா

ஒளிப்பதிவு:ராம்ஜி
இசை:ஜி.வி.பிரகாஷ்குமார்
தயாரிப்பு:விமல்கீதா
இயக்கம்:செல்வராகவன்.

நம் நண்பர்கள் யாராவது சற்று அழகு குறைவாக இருந்தால் தனுஷ் தனுஷ் என்று கிண்டலடிக்கும் காலம் மாறி இன்று தன் திறமையால் அனைவரின் வாயைப்பொத்தி மூக்கில் விரல் வைக்க வைத்துள்ள வளர்ந்துவிட்ட நல்ல நடிகர் தனுஷ்.
சமீபத்திய தனுஷ் படங்களில் உடலிலும் முக அமைப்பிலும் தனுஷை மெறுகேற்றி இருந்தார்கள். மீண்டும் செல்வராகவன் தனுஷை இந்தப்படத்தில் அழுக்காக்கி இருப்பதுபோல் தோன்றுகிறது.

மயக்கம் என்ன??? எதற்கு பொருந்துகிறதோ?இல்லையோ,படம் முழுக்க தனுசும் அவரது நண்பர்களும் மயக்கத்திலேயே இருக்கிறார்கள்.(போதை)
செல்வராகவன் சார் ,இந்த படம் அடுத்த தலைமுறைக்கான படம்னுதானே சொல்றீங்க? தனுஷின் பெண் நண்பர்களையும் படம் முழுக்க தண்ணி அடிக்க விட்டுருக்கலாமே??பெண்கள் தண்ணி அடிப்பதை இன்றுகூட பார்த்தேனே...இதெல்லாம் இந்த தலைமுறையிலேயே நடக்க்கும்போது பிறகு எதற்கு அதையும் விட்டுவைத்தீர்கள்???இதைவிட கேவலமான பல காட்சிகள் இருக்கும்போது???


சரி படத்தின் கதைக்கு வருவோம்...

கார்த்திக்காக தனுஷ்,யாமினியாக ரிச்சா.. நாயகன் கார்த்திக் பெரிய  போட்டோகிராபர் ஆக ஆசைப்படுகிறார்.இவரின் கனவும்,லட்சியமும் சிறந்த போட்டோகிராபர் ஆக வேண்டும் என்பதுதான்.அதோடு தனுசுக்கு பிடித்த,தெரிந்த ஒரே தொழிலும் போட்டோகிராபி மட்டும் தான். நாயகி ரிச்சா தனுசின் நண்பனின் கேர்ள் ஃப்ரண்டாக அறிமுகமாகிறார்.முதலில் தனுசும்,ரிச்சாவும் முட்டி மோதினாலும் வழக்கம்போல ரிச்சா, தனுசை கவிழ்க்க(காதலிக்க) பல இடங்களில் முயற்சி செய்கிறார். நண்பனின் காதலி என்பதால் தனுஷ் தவிர்க்க முயற்சிக்கிறார் பிறகு காதலில் விழுகிறார்.
இதற்கிடையில் தனுஷ் எடுத்த புகைப்படங்களை தான் எடுத்ததாக சொல்லி தனுசை ஏமாற்றுகிறார் ஒரு பெரிய போட்டோகிராபர்.திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாமலே வாழ்க்கை நகர்கிறது.இறுதியில் தனுஷ் சிறந்த புகைப்படத்திற்க்கான சர்வதேச விருது வாங்கி படத்தை சுபமாக முடித்துள்ளார்கள்.

காட்சியமைப்பு,இசை,பாடல்கள் அருமை...ஒளிப்பதிவும் நன்றாக இருக்கிறது.தனுசின் நடிப்பும் சூப்பர்.ரிச்சா குண்டாக இருக்கிறார்.தனுஷ்,ரிச்சா பொருத்தம் சரியில்லை. தனுசின் நணபனாக வரும் சுந்தருக்கு ரிச்சா நன்றாக பொருந்துகிறார்.பிடித்த ஒரு காட்சி:-

வேலை கிடைக்காத தனுஷ் தெருவில் சோகமாக நடந்து வருவார்.வழியில் ஒரு பாட்டியை பார்த்து பாட்டியிடம் எதோ பிடித்துபோக படமெடுக்க ஆசைப்படுவார் அந்த வசனம் அப்படியே..

பாட்டி உன்ன ஒரு தடவ போட்டோ எடுத்துகிட்டா?ப்ளீஸ் பாட்டி
வியப்போடு பாட்டி, என்னையா???ப்ளீஸ் பாட்டி
ஒன்னு என்னா எவ்ளோ வேணும்னாலும் எடுத்துக்கோ..
பாட்டி சிரி,ஹ்ம் கொஞ்சம் மேல பாரு,கீழ பாரு...என்று விதவிதமாக கிளுக்கிறார்
எடுத்த படத்தை பாட்டியிடம் காட்டுகிறார்
நான் இவ்ளோ அழகாவா இருக்கேன்?யேய் இந்த மெசினை நீ எதுவோ பன்னிட்டே..!!
அய்யே! நீதான் பாட்டி அவ்ளோ அழகா இருக்கே!!!
போடா..தினமும் கண்ணாடில பாக்குறேனே அதுல இப்டி இல்லையே??!
அய்யே நல்லாத்தான் பாட்டி இருக்கே இது பொய் சொல்லாது!!
உடனே பாட்டி தன் கணவனிடம் செல்கிறார்.
யோவ்! புள்ளாண்ட போட்டோ எடுத்துக்குறான் வந்து பாரு!!
த பே..
சொல்றேன்ல வாயா வந்து பாரு.
உன்னப்போயி எவன் போட்டோ எடுத்தான்?யாவாரத்த கெடுத்துகிட்டு
காமி
யோவ் பாரு என்ன அழகா இருக்குறேன்னு!
ஆமா! நீயா இது!!!
தம்பி எனக்கு ஒரு காப்பி கொடு...என் பொண்டாட்டி அழகா இருந்து பார்த்ததே இல்ல!!!

யதார்த்தமான படத்திற்கேற்ற நல்ல காட்சி இது.

படத்தில் தனுசின் நண்பர் சுந்தர் தன் காதலியை தனுசுக்கு தாரை வார்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்.எங்கு சென்றாலும் தனுசுடனே சுற்றுகிறார் அதிலும் முக்கியமாக சுந்தரின் காதலி ரிச்சா குளியலறையில் கதவை திறந்து வைத்துக்கொண்டு குளித்துக்கொண்டிருப்பார்.அந்த நேரத்தில் தனுசை காவலுக்கு இருக்க சொல்லிவிட்டு ஆய் வருகிறது என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பி போய்விடுவார்.காதலி குளியலறையில் குளிக்கும்போது எந்த காதலன் சார் ஒரு ஆணை துணைக்கு வைத்துவிட்டு வெளியே போவான்? அதிலும் ரிச்சா கதவை திறந்துபோட்டுக்கொண்டு குளிப்பாராம்... கேட்டால் பல்லி என்றால் பயம் என்பாராம்???கல்யாணம் ஆன பெண்ணை கட்டிப்பிடிப்பாராம்,கிஸ் அடிப்பாராம்..கல்யாணத்துக்கு முன் டேட்டிங் போவாராம்..ஊர்சுற்றுவாராம் ஆனால் அது காதல் இல்லையாம் ..டேட்டிங் செய்து கொண்டே வேறொருவரை ரூட் விடுவாராம்..செல்வராகவன் சார் உங்க வக்கிரத்துக்கு நாங்க ஊறுகாயா? இதற்கு நடுநிசி நாய்களே தேவலாம்.

இந்த படத்த பாக்குறதுக்கு வேலாயுதத்த இன்னொரு தடவ பார்த்துட்டு போயிடலாம்.கலாச்சார சீரழிவு.

மொத்தத்தில் செல்வராகவன் மயக்கத்தில் இருந்தபோது எடுத்த படம்.

வேலாயுதம் திரை விமர்சனம்.

நன்றி மீண்டும் சந்திப்போம்.

12 Responses to “மயக்கம் என்ன திரை விமர்சனம்-Mayakkam Enna Movie Review In Tamil”

Ganesh said...
27 November 2011 at 12:50

Immature review, grow-up kid. Please explain Tamil culture before talking about it.


iloveyou said...
27 November 2011 at 22:39

Nice review damn selva


iloveyou said...
27 November 2011 at 22:40

Immature review, grow-up kid. Please explain Tamil culture before talking about it.///

mr.ganesh simply google it:(


sundar said...
27 November 2011 at 22:42

மொத்தத்தில் செல்வராகவன் மயக்கத்தில் இருந்தபோது எடுத்த படம்.
nachu


Anbu said...
28 November 2011 at 18:39

அருமையான விமர்சனம்... செல்வராகவன் எப்படி தன் மனைவியை கூட்டிக்கொடுத்திருப்பான் என்பதை ப‌டமாக எடுத்திருக்கிறார் போலும்.. செல்வராகவன் ஒரு சைக்கோ என்பதை மீன்டும் ஒரு முறை நமக்கு ஞாபகப்படுத்தும் படம்.. தனுஷ் இப்போதுதான் கொஞ்சம் நன்றாக நடித்துக்கொண்டு வருகிறார் அவரது புகழை கெடுக்கும் நோக்கில் அவரது அன்னனே எடுத்த படம்.. தனுஷுக்கு ஒரு அட்வைஸ் "தயவு செய்து இனி செல்வராகவன் படத்தில் நடிக்காதீர்கள்"... G.Vபிரகாஷ் குமார் புண்ணியத்தால் படம் பாடல்களுக்காக பார்த்தவர்கள்தான் அதிகம்..


kuppu said...
4 December 2011 at 17:26

SUTHTHA PATHIYAKKARATHANAMANA VIMARSANAM ITHALLAM RASANAI ILLATHAVARKAL ITHU NALLA PADAM ITHAIYE ORU FARIN DIRECTOR PANUNA PARATUVEENGA


Ernesto Balaji said...
12 December 2011 at 00:04

விமர்சனத்தின் தர்க்கங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சொம்புகள் மனம் குமுறுகின்றன. ஏம்பா, நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா? மொக்கைப் படம் என்றாலும் நடுநிசி நாய்கள் அளவுக்கு கேவலம் இல்லை.


Unknown said...
30 December 2011 at 12:02

படத்தில் கொஞ்சம் கலாச்சார சீரழிவு போன்ற காட்சிகள் உண்டு. ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இது ஒன்றும் தமிழ் படத்தில் புதிது இல்லை. ஏதோ தமிழ் படங்கள் எல்லாம் தமிழ் கலாச்சாரத்தை கட்டிக் காப்பதை எங்கள் கடமை என்று சாசனம் எழுதி கொத்திட்ட மாதிரியும், அதை இது நாள் வரை தமிழ் படங்கள் மீறாமல் கடை பிடிப்பது மாதிரியும் பேசுகிரீர்கள். சமூக சீர் திருதப் படங்கள் என்று புகழ்ப்பட்ட எம்ஜிஆர் படங்களில் கூட அப்போதய கால நிலையில் எத்தனையோ சீரழிவு காட்சிகள் வந்துள்ளன. இன்னும் சிலுக்கு நடிகைகளின் காலத்தில் காட்டாத சீரழிவா. மேலும் நகைச்சுவை என்ற போர்வையில் துப்பாத வக்கிரமமா. எதையும் 'மிகை நாடி மிக்கக் கொளல்' வேண்டும் நண்பர்களே. 'மயக்கமென்ன' படத்தின் கரு இன்றய நவீன புகைப்படத்துறையும் அதன் வாய்ப்புகள் அதில் மிளிரும் நவீன பரிமானங்கள் அதில் தமிழ் இன இளைய சமுதாயத்திற்கு உள்ள சர்வதேச வாய்ப்புக்கள் என யாரும் இதுவரை சொல்லாத செய்தியை சொல்வது வரவேற்கத் தக்கது. புகைப்படத் துறை என்பது பெரும்பாலும் நம் மக்களுக்கு புகைப்படம் என்றால் என்ன திருமணம் பிறந்த நாள் போன்ற வற்றில் பிடிக்கும் ஒன்று என்று தான் தெரியும். ஆனால் புகைப் படத் துறை என்பது உண்மையில் மிக மிக பிரமாண்டமான ஒன்று. இப்படத்தில் இதை ஒட்டி ஒரு உரையாடலை அற்புதமாக அமைதுள்ளனர். ரிச்சா தனுசை சார் என்ன வேலை பாக்கிறார் என்று கேட்பார் அதற்கு பக்கத்து அவன் போட்டோகிஃபி செய்யரான் என்பார். அதற்கு ரிச்சா மீண்டும் எது இந்த மேரேஜ் பெர்த்தடே எல்லாம் எடுப்பாங்களே அந்தமாதிரியா என்பார் உடனே தனுஸ் பொங்கி எழுந்து மேடம் எங்கே கக்கூஸ் கலுவர வேலை பாகுறாங்கலா என்று பதிலடி கொடுப்பார். இது போல் படம் முழுக்க புகைப்படத்துறை பற்றி குறிப்பாக Wild life Photography ஒரு தமிழ் படத்தில் நிறையவே சொல்லி இருப்பது பெருமைப் பட வேண்டிய செய்தி. குற்றம் மட்டுமே பார்க்கின் சுற்றம் மட்டுமல்ல சுத்தமாக ஒன்றுமே இருக்காது. நன்றி புகைபடக் காதலன்.


kumar said...
11 January 2012 at 00:33

mr.selva ragavan,

please thirunthunga. makkalai kedukathenga


Udhayakumar said...
9 April 2012 at 23:10

முதிர்ச்சியற்ற விமர்சனம்


Anonymous said...
24 January 2014 at 01:57

itz a great movie! Just think of u in either that (a semi-retarded's)wife's or (hopeless abt his one & only loving career) husband's role...u can feel the pain & love within each other!!!!!!!!!


Anonymous said...
24 January 2014 at 01:59

As u said, first half is ridiculous...but second part matters a lot... to every hardworker who wud like 2 reach his goal... along with such a strong support (in this case..wife)!!!


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News