Tuesday, 1 November 2011

இது கல்யாண கதை-அனுபவம்

திருமணம்,ஜாதகம்,ஜோசியம்,சனி-இது அக்கா கதைகுளித்து முடித்து தலைவாரிக்கொண்டு இருந்தேன். நண்பன் மேசையில் தன் லேப்டாப்பில் எதையோ நீண்ட நேரமாக உற்று பார்த்துக்கொண்டிருந்தான். தலை வாரிவிட்டு நண்பன் அருகில் சென்றேன்.வழக்கம்போல ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தான்.மெயிலில் வந்திருக்கும் என நினைத்துக் கொண்டேன்.

நண்பனை பற்றி சொல்லிவிடுகிறேன். நண்பனுக்கு சில வருடங்களாகவே வீட்டில் பெண் பார்க்கிறார்கள்.
கல்லை கண்டால் நாயை காணும், நாயை கண்டால் கல்லை காணும் கதையாக நண்பனுக்கு பிடித்தால் பெண்ணுக்கு பிடிப்பதில்லை,பெண்ணுக்கு பிடித்தால் நண்பனுக்கு பிடிப்பதில்லை,இருவருக்கும் பிடித்தால் ஜாதகம் பொருந்துவதில்லை,சரி ஜாதகமும் பொருந்தினால் குடும்பம் சரியில்லை, பெண்னை இன்னும் படிக்க வைக்கப்போறோம் அப்டி இப்டின்னு எதாவது ஒரு தடங்கல் வந்து அலைக்கழித்துக்கொண்டிருந்தது.

இந்தப்பெண்ணை நண்பனுக்கும் பிடித்து வீட்டில் உள்ளவர்களுக்கும் பிடித்துவிட்டது போல..அதான் நீண்ட நேரமாக வைத்த கண் மாறாமல் வெறிக்க பார்த்துக்கொண்டிருக்கிறான் :) நண்பன்.

அருகில் சென்று உசாராக யார் இவங்க என்றேன். ”எனக்கு பார்த்து இருக்காங்க.ஃபிக்ஸ் ஆகிடும்னு நினைக்கிறேன்” மகிழ்வுடன் சொன்னான் நண்பன்.

உடனே வாழ்த்துக்கள் டா , நல்லா இருக்காங்க,உனக்கு நல்ல மேட்சிங் என்றேன்.இரண்டு வருசமா பார்க்கிறாங்கல்ல இது நான்.

இல்லடா மூணு வருசம் ஆச்சு. ஹ்ம் எல்லாம் அமையும்போதுதாண்டா அமையும் “கிடைக்கிறது கிடைக்காம இருக்காது,கிடைக்காம இருக்கிறது கிடைக்காது” தத்துவங்களை உதிர்த்து விட்டேன்.

அதற்குள் நம்ம இன்னொரு நண்பன் திடுமுண்டு கோபாலு வேலை முடிந்து வேகமாக வந்தான்.குளியலறை நோக்கி சென்றான்.(திடுமுண்டு கோபாலு.... நண்பர்கள் சேர்ந்து வைத்த பெயர்)

10 நிமிடங்கள் இருக்கும் குளித்துமுடித்து வெளியே வந்த திடுமுண்டு கோபாலு லேப்டாப்பில் நண்பன் பெண்ணை பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து விட்டான்.

 எதையும் யோசிக்காமல் வழக்கம்போல யாருடா இது உங்க அக்காவா உன்ன மாதிரியே இருக்காங்க என்றான் பாருங்கள். அவ்வளவுதான்.கதை முடிந்தது. 

நண்பன் போனை எடுத்தான்.. மறுமுனையில் அவர் வீட்டில் யாரோ எடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ம்.. நான் தான் பேசுறேன்.இந்த பொண்ணு வேண்டாம்.வேற பாருங்க...
வீட்டில் உள்ளவர்கள் எதோ சொல்லியிருப்பார்கள்...
பாருங்கன்னா பாருங்க என்று போனை வைத்து விட்டான்.

நண்பன் அருகில் சென்று “கொஞ்சம் குண்டா இருக்கும் பெண்கள் ,கொஞ்சம் வயசு அதிகம் மாதிரி தெரிவாங்கடா..மத்தபடி அவஙக சின்ன வயசுதான் பார்த்தாலே தெரியுது..உனக்கும் அவங்களுக்கும் பொருத்தமா இருக்கும்டா..திடுமுண்டு கோபால பத்தி உனக்கு தெரியாதா? என்றேன்.”

இவனே இப்டி சொல்றான் ..இன்னும் மத்தவங்க பார்த்தா என்னல்லாம் சொல்வாங்களோ? வேனாண்டா என்றான்.

அத்தோடு அந்த கதை முடிவடைந்தது. இதைத்தான் இடம்,பொருள்,ஏவல்னு சொல்றாங்களோ???

ஹ்ம் நண்பன் கல்யாண கதையெல்லாம் சொல்றேன்.என் கதை என்ன ஆகப்போகுதோ கடவுளே !!!

பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளை பெரும்பாலான பெண்கள் பிடிக்கவில்லை என்று சொல்வதில்லை.ஆனால் மாப்பிள்ளைகள் இதை சுலபமாக சொல்லிவிடுகிறார்கள்.


ஏனெனில் பெண்ணியவாதிகள் சொல்வதுபோல் நம் நாட்டில் பெண்கள் இன்னும் அழகுப்பொருட்கள்,காட்சி பொருட்கள்,அடிமை பொருட்கள்.

நன்றி மீண்டும் சந்திப்போம்.இது நம்ம கதை பார்த்துட்டு போங்க.


13 Responses to “இது கல்யாண கதை-அனுபவம்”

இராஜராஜேஸ்வரி said...
2 November 2011 at 00:28

“கிடைக்கிறது கிடைக்காம இருக்காது,கிடைக்காம இருக்கிறது கிடைக்காது”


ஷைலஜா said...
2 November 2011 at 05:38

இராஞேஸ்வரி சொல்வதையே நானும் சொல்கிறேன்! வலைப்பூ அழகா இருக்கு.


மழை said...
2 November 2011 at 05:47

“கிடைக்கிறது கிடைக்காம இருக்காது,கிடைக்காம இருக்கிறது கிடைக்காது”///

நன்றி தத்துவத்த திருப்பி அப்டியே சொல்றீங்க..ஹ்ம் நன்றி நன்றி.


மழை said...
2 November 2011 at 05:48

இராஞேஸ்வரி சொல்வதையே நானும் சொல்கிறேன்! வலைப்பூ அழகா இருக்கு.///

தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி சைலஜா மேடம்:)


கோவை நேரம் said...
2 November 2011 at 06:09

அனுபவம் புதுமை ..அப்புறம் உங்க நண்பருக்கு என்ன ஆச்சு ,,


suryajeeva said...
2 November 2011 at 10:58

கடைசியா அந்த படத்தில சொன்னீங்க பாருங்க அது தான் நிதர்சனம்


ilavarasan said...
2 November 2011 at 11:20

உங்க நண்பர் குடும்பத்துல குளப்பத்த உண்டு பண்ணிட்டாரே!


மழை said...
3 November 2011 at 20:22

அனுபவம் புதுமை ..அப்புறம் உங்க நண்பருக்கு என்ன ஆச்சு ,,.////

பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்..
நன்றி வருகைக்கும் கருத்திற்கும்:)


மழை said...
3 November 2011 at 20:23

கடைசியா அந்த படத்தில சொன்னீங்க பாருங்க அது தான் நிதர்சனம்/

நன்றி சூர்யாஜீவா:)


மழை said...
3 November 2011 at 20:23

உங்க நண்பர் குடும்பத்துல குளப்பத்த உண்டு பண்ணிட்டாரே!///

ஹஹ நன்றி இளவரசன்:)


சிவகுமாரன் said...
6 November 2011 at 12:16

திடுமுண்டு கோபாலு ..
ஆகா நல்ல பேரு . நெறைய பேருக்கு வைக்க வேண்டியிருக்கு இந்த பெயரை . . திடுமுண்டு மாலா திடுமுண்டு செந்திலு திடுமுண்டு துரை

அட அட
ரொம்ப நன்றிங்க


மழை said...
11 November 2011 at 05:41

திடுமுண்டு கோபாலு ..
ஆகா நல்ல பேரு . நெறைய பேருக்கு வைக்க வேண்டியிருக்கு இந்த பெயரை . . திடுமுண்டு மாலா திடுமுண்டு செந்திலு திடுமுண்டு துரை

அட அட
ரொம்ப நன்றிங்க///

ரொம்ப பாதிக்கப்பட்டுறிக்கீங்க போல :)


NOKIA said...
14 February 2012 at 19:29

நன்பா நன்பனின் திருமணபென் வாழ போவது அவர் அவர் மனதுக்கு பிடித்திருக்க சரி அழகா இருக்காங்கன்னு சொல்லிருங்க பொய்யாக கூட இப்படி நன்பன் கூறுகிறன் என எந்த பென்னையும் பிடிக்கல என கூறாதீர்கள் உங்க வீட்ல ஓரு தங்கை இருந்தா இப்படி நடந்தா எப்படி இருக்கும் யோசியுங்கள் தோழர்களே பென்கலை வெறும் அழகுபொருளாக நினைக்காதீர் அவங்க உங்கல பிடிக்கலன்னு சொன்ன எப்படி இருக்கும் யோசிச்சு பாருங்க நன்பர்களே by A.RAMESHKUMAR KARISAI THANRAL


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News