Wednesday, 5 October 2011

புதிய ப்ளாக்கர் பதிவர்களுக்கான சில பயணுள்ள தகவல்கள்-Tips For New Bloggers

ப்ளாக்கர் சில பயணுள்ள தகவல்கள் -Blogger Tips


டேய்!!! நீயே இங்க ப்ளாக் எழுத ஆரம்பிச்சு இரண்டு மாசம் 12 நாள்தான் ஆகுது.அதுக்குள்ள புதிய பதிவர்களுக்கு டிப்ஸ் கொடுக்குறியா...இப்டிதானே நினைக்கிறீங்க??? சரி விடுங்க பாஸ்... இன்னிக்கு புதுசா வேலைக்கு சேர்ந்தா நாளைக்கு இன்னுமா புதுசு ”நீ”ன்னு கேட்பாங்க பாஸ்.. இதான் உலகம்...

நாங்களாம் எழுதின உடனே பிடிக்காது ..எழுத எழுததான் பிடிக்கும்.
சரி விசயத்துக்கு வருவோம். புதிய பதிவரா நீங்கள்?ப்ளாக் ஆரம்பிச்சிட்டு எப்டி நம்ம வலைப்பூவை இன்னும் அழகா,சிறப்பாக்கலாம்னு யோசிக்கிறீங்களா?இதோ இது முழுக்க உங்களுக்கான பதிவுதான்.

ப்ளாக்கர்களுக்காவே சேவையில் இயங்கும் சில வலைத்தளங்கள்:

இந்த வலைத்தளங்கள் எல்லாமே நான் பார்த்ததில் சிறப்பானவை மட்டுமே. இந்த தளங்களில் பதிவர்களுக்கு தேவையான அனைத்து விட்ஜெட்,ப்ளாக்கர் டிப்ஸ்,ப்ளாக்கர் டெம்ப்ளேட்,ஜாவா ஸ்க்ரிப்ட் என இன்னும் ஏராளம் உண்டு.

1.SPICEUPYOURBLOG
2.ABUFARHAN.COM 
3.BLOGDOCTOR 
4.BLOGGERPLUGGINS 
5.TIPS FOR NEW BLOGGERS 
6.BLOGGER TIPS AND TRICKS 
7.PROBLOGGER 
8.MASHABLE 
9.BLOGGERMINT 
10.BLOGGER STOP

ப்ளாக்கர் டெம்ப்ளேட் வழங்கும் சில தளங்கள்:


1.DELUXE TEMPLATES 
மேலே உள்ள இலவசமாக டெம்ப்ளேட் கொடுக்கும் Custom blogger template களை உபயோகப்படுத்துவதில் சில பிரச்சினைகள் உள்ளது.

1.Google Bot ஆல் சரியாக சுலபமாக உங்கள் தளத்தை புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்.

2.டெம்ப்ளெட்டை எதாவது மாற்றம் செய்ய விரும்பும்போது சில பிரச்சினைகள் வரலாம்.

அதோடு உங்களுக்கு XHTML பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும்.ஆதலால் ப்ளாக்கர் வழங்கும் default classic template களை உபயோகிப்பது பிரச்சினையே இல்லாதது.அப்படி இல்லாவிட்டால் கீழ் உள்ள டைனமிக் டெம்ப்ளேட் உபயோகிக்கலாம்.

Dynamic View Google New Blogger Template

சில தினங்களுக்கு முன் கூகிள் டைனமிக் ப்ளாக்கர் டெம்ப்ளேட்களை வெளியிட்டது.இதுவும் சிறப்பாகவே இருக்கிறது.இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கு சொடுக்கி பாருங்கள்

புதிய பதிவர்களுக்கான அடிப்படை HTML CODES-Basic Html Codes For Beginners

புதிய பதிவர்கள் அனைவரும் அடிப்படை HTML கோட்களை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.இணைப்பு கொடுப்பது,புகைப்படத்தை பதிவிடுவது,காணொளிகளை பதிவிடுவது பற்றி பார்ப்போம்.முதலில் இணைப்பு

இணைப்பு-Links

ப்ளாக்கர் கம்போஸ் மோடில் இணைப்பு இருந்தாலும் சில attribute இருக்காது.அது எப்படி என்று பார்ப்போம்.


<a href="http://www.mazhai.net/2011/07/blog-post_25.html" target="blank">ப்ளாக்கரில் இசையை பதிவிடுவது எப்படி?</a>


மேல் உள்ள கோட்கள் கீழுள்ளபடி பிரதிபலிக்கும்.

ப்ளாக்கரில் இசையை பதிவிடுவது எப்படி?

1.மேலே வெள்ளை நிறத்தில் உள்ள http://www.mazhai.net/2011/07/blog-post_25.html என்பதற்கு பதிலாக நீங்கள் இணைப்பு கொடுக்கவிருக்கும் தளத்தின் பெயர்.

2. target=blank என்பது உங்கள் தளத்தை விட்டு வெளியேறிவிடாமல் இணைப்பானது புதிய Tab இல் திறக்கும்.இது மிக முக்கியமான ஒன்று.தேவையில்லையெனில் target=blank என்பதை நீக்கிவிடலாம்

3.ப்ளாக்கரில் இசையை பதிவிடுவது எப்படி? என்ற இடத்தில் நீங்கள் கொடுக்கும் இணைப்பு பற்றி உங்கள் விருப்பம்போல் எழுதிக்கொள்ளலாம்.

புகைப்படங்கள்-Images

க்ளிக் செய்ய முடியாத(Unclickable images) தேவையான அளவு நீள அகலத்துடன் புகைப்படத்தை பதிவது எப்படி?


<img src="http://lh3.ggpht.com/mendes1961/SP-eOllhdYI/AAAAAAAAPZM/6VUkZKqsPEo/s800/17934.png" width="50" height="80">


மேல் உள்ள கோட்கள் கீழுள்ளபடி பிரதிபலிக்கும்

 

இதில் வெள்ளை நிறத்தில் உள்ள (URL OF THE  IMAGE)இடத்தில் நீங்கள் அப்லோட் செய்த உங்கள் புகைப்படத்தின் முகவரி பிறகு நீளம்,அகலம்(width,height) ஆகியவற்றை உங்களுக்கு தேவையான அளவு மாற்றிக்கொள்ளலாம்.

காணொளிகள்-Videos

தேவையான நீள அகலத்துடன் காணொளிகளை பதிவிடுவது எப்படி?

1. நீ குழாய்க்கு(you tube) செல்லுங்கள்.

2.அதில் வீடியோவின் கீழே இருக்கும் share என்பதை க்ளிக் செய்யுங்கள்.அதில் வரும் embed என்பதை க்ளிக் செய்தால் அதன் கீழே தேவையான நீள அகலம் இருக்கும்.அதை கிளுக்கினால் உங்களுக்கு தேவையான் கோட்கள் பாக்ஸில் வரும் அதை அப்படியே இங்கு காப்பி செய்து பேஸ்ட் செய்து பதியலாம்.(html mode) அல்லது Manual ஆகவும் நீள அகலத்தை மாற்றிக்கொள்ளலாம்.அந்த கோட்களில் இருக்கும் width=450 height=400 என்பதற்கு பதிலாக நீங்கள் பதிவிட விரும்பும் நீள அகலமாக மாற்றிக்கொள்ளலாம்.

மேலும் சந்தேகம் எதுவும் இருந்தால் தயங்காமல் கேளுங்கள். நன்றி மீண்டும் சந்திப்போம்.


24 Responses to “புதிய ப்ளாக்கர் பதிவர்களுக்கான சில பயணுள்ள தகவல்கள்-Tips For New Bloggers”

தமிழ்வாசி - Prakash said...
6 October 2011 at 03:23

அட... டிப்ஸ் சூப்பரு...


இராகவன் நைஜிரியா said...
6 October 2011 at 09:22

ரொம்ப நன்றாக எழுதியிருக்கீங்க. புதிதாக வலைப்பூவிற்கு வருபவர்களுக்கு சுலபமாக புரியும் படி எழுதியிருக்கீங்க.

www.udanz.com - ல் இந்த பதிவு 15 ஓட்டு வாங்கியிருக்கு பார்த்தீங்களா..


Abdul Basith said...
6 October 2011 at 11:29

பதிவர்கள் அனைவருக்கும் பயன்படும் தளங்கள் மற்றும் குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி!


சு. ராபின்சன் said...
6 October 2011 at 11:53

சூப்பர்.


வைரை சதிஷ் said...
6 October 2011 at 14:41

சூப்பர் நண்பா


அம்பாளடியாள் said...
6 October 2011 at 16:12

பயனுள்ள அருமையான நல்ல தகவல் மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ............


மழை said...
6 October 2011 at 18:59

அட... டிப்ஸ் சூப்பரு...///
நன்றி தமிழ்வாசி:)


மழை said...
6 October 2011 at 19:01

ரொம்ப நன்றாக எழுதியிருக்கீங்க. புதிதாக வலைப்பூவிற்கு வருபவர்களுக்கு சுலபமாக புரியும் படி எழுதியிருக்கீங்க.

www.udanz.com - ல் இந்த பதிவு 15 ஓட்டு வாங்கியிருக்கு பார்த்தீங்களா..///

நன்றி ராகவன் தொடர்ந்து வாருங்கள்:))
ஹ்ம் பார்த்தேன் வாக்களித்த அனைவருக்கும் நன்றி.


மழை said...
6 October 2011 at 19:02

பதிவர்கள் அனைவருக்கும் பயன்படும் தளங்கள் மற்றும் குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி!//
நல்வரவு நன்பரே:)


மழை said...
6 October 2011 at 19:03

சூப்பர்.///
நன்றி:)


மழை said...
6 October 2011 at 19:05

சூப்பர் நண்பா///
நன்றி சதீஷ் நண்பா:)


மழை said...
6 October 2011 at 19:06 This comment has been removed by the author.

மழை said...
6 October 2011 at 19:07

பயனுள்ள அருமையான நல்ல தகவல் மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ......//

நல்வரவு அம்பாளடியாள்:)


stalin said...
6 October 2011 at 19:34

க்ளிக் செய்ய முடியாத(Unclickable images) தேவையான அளவு நீள அகலத்துடன் புகைப்படத்தை பதிவது எப்படி? //

தெரிந்து கொண்டேன்

நன்றி சகோ ....


மழை said...
6 October 2011 at 19:50

நல்வரவு ஸ்டாலின் தொடர்ந்து வாருங்கள்:)


GOVINDARAJ,MDMK,MADURAI. said...
13 October 2011 at 21:58

nalla irunthathu


இராஜராஜேஸ்வரி said...
23 October 2011 at 09:00

பயனுள்ள அருமையான நல்ல தகவல் பகிர்வுக்கு .. மிக்க நன்றி


pangusanthaieLearn said...
20 November 2011 at 21:53

hi, i would like to know how to add a widget like the one u have for "Popular Posts". it is very good and il like to use it on my blog.can u write a blog for it


ilavarasan said...
9 January 2012 at 18:23

இந்த பதிவு இன்றுதான் என் கண்ணில் பட்டிருக்கிறது.அருமையான பதிவு மற்றும் மிக மிக பயனுள்ள பதிவு.
நன்றி.


sunfun said...
1 June 2012 at 00:22

mikke nantri payenulla thakaval

come to my blog www.suncnn.blogspot.com


raja said...
23 November 2012 at 13:05

very very best. kavithigal.


raja said...
23 November 2012 at 13:06

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :


raja said...
23 November 2012 at 13:07

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :


jahan peer said...
8 June 2016 at 08:49

http://allliveonline.blogspot.com/


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News