Sunday, 2 October 2011

ராணா பாடல்கள் படங்கள் பற்றிய தகவல்கள்-Rana Rajinikanth Latest News

ராணா(ரானா) ரஜினிகாந்த் தகவல்கள்-Rana Rajinikanth Movie Stills,Photos,Images,Wallpapers,Songs and Latest News.

ஆசியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கவிருக்கும் ராணா திரைப்படத்தை அகில உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சினிமா என்றால் அழகே முக்கியம் என்ற அடிப்படையை மாற்றியமைத்து உல்க ரசிகர்களின் மனதை அன்பால்,தன் ஸ்டைலான நடிப்பால் அடிமையாக்கியவர் சூப்பர் ஸ்டார்.


அழகு,திறமை மட்டுமே என்றும் வென்றுவிடாது..அதைவிட பண்பும்,அன்புமே மக்களின் மனதில் என்றும் ஆட்சிசெய்யும் என சொல்லாமல் நிரூபித்தவர். wesley harris எழுதிய Nice Guys Can win என்ற புத்தகம் இதற்கு சான்று.அழகு என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும் ரஜினியின் ஸ்டைல் அழகின் அழகு.!!!

 ரஜினி ரஜினிதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சுருக்கமான வரலாறு:- 

அந்த அதிகாலைக்கு தெரியாது அன்றுமுதல் இந்த பூமிக்கு இரண்டு சூரியன்கள் என்று.காலண்டருக்கு தெரியாது இந்த தினம் திருவிழா தினம் என்று.அந்த நாள் டிசம்பர் 12 1950. அந்த குழந்தைக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் சிவாஜி ராவ் கேய்க்வாட்.

 மஹாராஸ்ட்ர குடும்பத்தில் ஜிஜா பாய்,ராமோஜிராவ் கேய்க்வாட்க்கு மகனாக பிறந்தார். இந்த குழந்தை கண்ட முதல் சோகம் 5 வயதில் அம்மாவின் மரணம்.அம்மாவை இழந்த இந்த குழந்தை அன்பிற்கும் பாசத்திற்கும் நிறையவே ஏங்கியது.

 பிறகு பள்ளிப்படிப்பு ஓய்வு நேரத்தில் வேலை செய்வது என வாழ்க்கை நகர்ந்தது.அப்போதைக்கு இவருக்கு இருந்த ஒரே ஆறுதல் அண்ணன் சத்யநாராயணராவ் மட்டுமே. இந்த நாட்களில் தமிழகமே தனக்கு விசிலடிக்க போகிறது என தெரியாமல் தனக்கு தானே விசிலடிக்க தொடங்கினார் சிவாஜிராவ் கேக்வாட். பெங்களூர் போக்குவரத்து கழகத்தில் ப்ஸ் கண்டக்டராக ஒரு புதிய பாதையில் பயணிக்க தொடங்கினார்.

கன்னட நாடக ஆசிரியர் முனியம்மாவின் நாடகங்களில் துரியோதனன் வேசம் கட்டினார். நாடக மேடையில் சிவாஜிராவின் நடிப்பை பார்த்து இந்த நதி கடலாக வேண்டும் என முதன் முதலாக ஆசைப்பட்ட மனம்,கைத்தட்டி ரசித்த கரம் ராஜ் பகதூர்.இவர்தான் சிவாஜி ராவ் என்ற கண்டக்டரை நடிப்பு கல்லூரிக்கு படிக்க சென்னைக்கு ஓட்டிவந்த ட்ரைவர்.

 1973 madras film institute ல் இரண்டு ஆண்டு நடிப்பு பயிற்சியோடு நிஜ வாழ்க்கையின் கோர முகங்களையும்,யதார்த்தத்தின் உண்மை பக்கங்களையும்,தோல்வியின் வலிகளையும்,வறுமையின் ரணங்களையும் சேர்த்து படித்தார் சிவாஜிராவ்.

 நெறிஞ்சி முட்களும்,சரலை கற்களுமாய் நடந்த சிவாஜிராவின் பாதங்களுக்கு பட்டு கம்பளத்தை பரிசாய் கொடுக்க வந்தது ஒரு மாபெரும் கரம்.திறமைகளை தேடி தேடி தேனெடுக்கும் படைப்பு பட்டாம்பூச்சி கே.பாலச்சந்தர் விழிகளில் பரபர,கறுகறு,சுறு சுறு,துரு துருவென இருந்த சிவாஜிராவ் விழ சினிமா என்னும் வெள்ளித்திரையில் எழுதப்பட போகிற ஒரு மாபெரும் சரித்திரத்திற்கான முதற்புள்ளி வைக்கப்பட்டது.

கலைந்த முடி,திரண்ட தேகம்,காந்த விழிகள்,கட்டை மீசை,கிழிந்த கோட்,ஸ்டைல் நடை,அதிர் சிரிப்பு என கதவு தள்ளிக்கொண்டு வெள்ளித்திரையில் இந்த கருப்பு இளைஞன் நுழைந்தபோது சிவாஜிராவ் ரஜினிகாந்தாக இருந்தார்.

நாள் ஆகஸ்ட் 15 1975,ஆபூர்வ ராகங்கள் வெளியானபோது அது வெறும்படம்.ஆனால் இப்போது வரலாற்று ஆவணம்.முதல் படத்திலேயே கம்ல்,ஸ்ரீவித்யா, நாகேஷ்,மேஜர் சுந்தர்ராஜன் என பிரபல் நடிகர்களையெல்லாம் பின்னுக்கு தள்ளி தன்னை கவனிக்க வைத்ததுதான் ரஜினி என்கிற தனிக்காட்டு ராஜாவின் பலம்.சிவப்பு நிறம் ஆட்சி செய்த வெள்ளித்திரையில் கறுப்புக்கோர் அழகுண்டு என்று காட்டிய தங்கமகன்.

அபூர்வ ராகங்கள் தொடர்ந்து மூன்றுமுடிச்சு,அவர்கள் என பாலச்சந்தர் படைப்புக்களில் வில்லனாய் நடித்த ரஜினிகாந்த இனி கதாநாயகனாக மாறலாம் என துனிந்து எடுத்த முடிவு ரஜினியின் திசையையே மாற்றியமைத்தது.

ரஜினி,கமல் இணைந்து நடித்த படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடிக்க இனி இருவரும் பிரிந்து தனியாக நடிக்கலாம் என பேசி முடிவெடுத்தனர்.இதுவே ரஜினியின் வெற்றிக்கு மாபெரும் வித்தாக அமைந்தது.

சினிமா என்றாலே சிங்காரம்,ஹாஸ்யம்,ரெளத்திரம்,காருண்யம்,பிபாஸ்தம்,பயாணகம்,வீரம்,அபுதம் என ஒன்பது ரசங்களை பற்றித்தான் பேசுவார்கள்.ஆனால் சூப்பர்ஸ்டார் காட்டியது 10 வது ரசம்.

எம்.ஜி.ஆர் என்றால் வீரம்,சிவாஜி என்றால் நடிப்பு,ஜெமினி கனேசன் என்றால் காதல்,கமல் என்றால் அழகு என ஆளுக்கொரு வரத்தோடு தமிழ் சினிமாவை ஆள
யாரும் தொடாத,யாராளும் தொடமுடியாத ஒன்றை தொடங்கினார் சூப்பர் ஸ்டார் அது ஸ்டைல்.

 நடை,உடை,பாவணை,டான்ஸ்,ஃபைட் என ரஜினி எது செய்தாலும் அனைத்திலும் ஸ்டைல் தான்.

சூப்பர் ஸ்டார்னா எப்டி ஸ்டைலோ அதுபோல பஞ்ச் டயலாக்.படத்துல பார்த்தா அது வெறும் வசனம் உட்கார்ந்து யோசிச்சா ஒவ்வொன்னும் தத்துவம்.

பைரவி படத்தோட விளம்பரத்துல த கிரேட் சூப்பர் ஸ்டார் ரஜினின்னு முதன் முதலா கலைப்புலி எஸ்.தாணு போஸ்டர்ல அடிச்சப்ப எம்.ஜி.ஆர்,சிவாஜிலாம் இருக்கும்போது எனக்கெல்லாம் எதுக்கு பட்டம்னு பதறிப்போனார் ரஜினி.

ரஜினி சொல்றது மாதிரி கிடைக்கிறது கிடைக்காம இருக்காது,கிடைக்காம இருக்குறது கிடைக்காது ஆங்..

புரட்சிதாசன் இயக்கிய நான் போட்ட சவால் திரைப்படத்துல சூப்பர் ஸ்டார் டைட்டில் வந்தாலும் சூப்பர் ஸ்டார்ங்கிற பட்டம் கொடிகட்டி பறக்க ஆரம்பிச்சது சரியா சொல்லனும்னா கவிதாலயா தயாரித்து சுரேஷ் கிருஷ்னா இயக்கிய அண்ணாமலை திரைப்படம்தான்.

அதுக்குப்பிறகு அண்ணாமலை,பாட்ஷா,முத்து,அருணாச்சலம்,படையப்பான்னு தொட்டதெல்லாம் வெற்றிதான்,கொட்டுனதெல்லாம் கோடிதான்.

அபூர்வ ராகங்கள் மூலமா தமிழ் நாட்டோட கதவ திறந்து சூப்பர்ஸ்டார் ஆன ரஜினிகாந்த்,

பாட்ஷா ல இந்தியாவின் சூப்பர் ஸ்டார்.
முத்து ல ஜப்பானின் சூப்பர்ஸ்டார்.

எந்திரன் வந்ததுக்கப்புறம் உலகம் முழுக்க சூப்பர் ஸ்டார்.

என்ன வந்தாலும் கலங்காத நம்ம சூப்பர் ஸ்டாருக்கு சமீபத்துல உடல் நிலையில் ஒரு சின்ன பிரச்சினை ஒட்டுமொத்த உலக ரசிகர்களும் கலங்கினார்கள் ப்ரார்த்தித்தார்கள்.கைமேல் பலன் .இதோ உங்கள் ரஜினிகாந்த் முழுமையாக குணமடைந்து ராணாவுக்காக தயாராகிறார்.

இனி ரானா தகவல்கள்:

சூப்பர் ஸ்டார் கதை எழுதி கே.எஸ் ரவிக்குமார் இயக்கும் மெகா பட்ஜெட் படம் ராணா. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இது அனிமேசன் படம் மட்டுமே அல்ல இது முழுக்க ரஜினி படம் என்று கூறப்பட்டுள்ளது.
அனிமேசன் துறையை ரஜினியின் மகள் கவனிக்கிறார்..அதுதான் பயமாக இருக்கிறது அம்மனியிடம் அவ்வளவு திறமை!!!

சூப்பர் ஸ்டார் மூன்றுமுகத்திற்கு பிறகு மூன்று வேடங்களில் இப்போதுதான் நடிக்க இருக்கிறார்.

ரஜினிகாந்த்(Rajinikanth)-ராணா டக்குபாய்,சோனு சொக்குபாய்,மற்றும் வில்லன் புஸ்கார் (Rana Daggubhai and Sonu Sokkubhai (Twins) and as Third role Villian Pushkar (Triple role).ஆகிய மூன்று வேடங்கள்.

தீபிகா படுகோனே(Deepika Padukone )-இளவரசி ராணி லெக்‌ஷ்மி (Princess Ranilakshmi)

கஞ்சா கருப்பு(kanja karuppu)- நகைச்சுவை வேடம்(comedian)


Rana Press Meet KS ravikumar deepika Padukone and Soundarya Rajinikanth.




Rana Pooja and Rana First shoot Video



மிகச்சிறந்த கேமரா தொழில்நுட்பம் புதிய முயற்சி:


Arri Alexa என்ற புதிய கேமரா ரானாவில் பயன்படுத்தப்பட இருக்கிறது.பரிசோதித்து பார்த்ததில் இந்த புதிய ஃபார்மட்டில் படம் தெளிவாகவும் துல்லியமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.(The Alexa records 2880x1620 pixel in a 12-bit .ARRIRAW format.The Result is Amazing. )



ராணா பாடல்கள்

ராணாவின் இரண்டு பாடல்கள் முடியும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.(இசை வெளியீட்டு விழா தேதி வெளியிடப்படவில்லை)(Rana audio release date not yet)

ராணா பஞ்ச் டயலாக்ஸ்:

ரசிகர்கள் இப்பவே பஞ்ச் டயலாக் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

1.போனா போகுதுன்னு மன்னிச்சி விடுறடுக்கு நான் சூனா பானா இல்லடா ராணா டா..!!!
2. நான் ராணா எங்கிட்ட வம்பு வேணா..!!!
3.வரும் ராணா வெல்லும் மக்களின் மனதை தானா..!!!

ராணா புகைப்படங்கள் அனைத்தும் கீழே;-

raana rajini stills dp badge
rana pooja rajinikanth deepika padukone




rana stills images photos deepika padukone rajinikanth

rana

rana rajinikanth first shoot look stills photos images wallpapers

rana rajinikanth special effects 3d gfx

rana rajinikanth stills animated still photo image wallpaper

rana rajinikanth poster stills paper ads

rana

rana rajinikanth looks like lion stills rana rajini stills fan made photos images wallpapers gallery


rana rajinikanth movie stills images photos graphics


அப்ரம் லேட்டஸ் நியூஸ் என்னன்னா?ராணா நிறுத்தப்பட்டு விட்டதாக ஒரு புரளி நேற்று முதல் பரப்பப்பட்டு வருகிறது.ராணா வரும் என நம்புவோம்.


1 Responses to “ராணா பாடல்கள் படங்கள் பற்றிய தகவல்கள்-Rana Rajinikanth Latest News”

ஆர்.சண்முகம் said...
4 October 2011 at 17:19

ஏன் எப்படி 300 பருத்தி வீரர்கள் படத்தையெல்லாம் கிராபிக்ஸ் பண்ணி இருக்கு,,,,


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News