Monday, 17 October 2011

கதை| கதைகள்| சிறுகதை| சிறுகதைகள்

கதை| கதைகள்| சிறுகதை| சிறுகதைகள்

சமீபத்தில் படித்ததில் பிடித்த கதை-தண்டனை

 

broken heart girlகாதலே


 ”கலைச்சிடு...யாருக்கும் பிரச்சினை இல்லை” என்றான் கோட்டி... “என்ன பேசறீங்க கலைக்குறதுக்கு இது என்ன ஆட்சியா?.குழந்தைங்க.என் வயித்துல வளர்ற குழந்தைக்கு நீங்கதான் அப்பா”


"அதுக்கு சாட்சி இருக்கா?ஒண்ணு தெரியுமா.. நாம காதலிச்சதுக்கு எந்த ஆதாரமும் உன்கிட்ட கிடையாது.இந்த 365 நாள்ல லவ் லெட்டர் அனுப்பினதும்,உன்னையே கொடுத்ததும் நீதாண்டி மக்குப்பெண்ணே....சோ...356வது விதியின்படி கலைச்சுடு!” 


அரசியல்வாதியின் மகனாக பேசினான்.ஆட்சி மாற்றம் அவணுள் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்தாள் அகிலா.

“வரேண்டி என் அப்பாவிப்பெண்ணே...” 

பல்சரை எடுத்துக்கொண்டு பறந்தான்.ஹோட்டல் லீ மெரிடியன் தாண்டி வளைவில் திரும்பியபோதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. 

குறுக்கே வந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டான் கோட்டி. 

பாலாஜி ஹாஸ்பிட்டல்.. 
ஆபரேசன் முடிந்து வெளியே வந்த டாக்டரை பதற்ற முகத்துடன் நெருங்கினார் எம்.எல்.ஏ.அப்பா . 

“உயிருக்கு பிரச்சினை இல்லை.காப்பாத்திட்டோம்.பட்,ஒரு வருத்தமான விசயம் முக்கியமான இடத்துல அடி பட்டதால இனி அவரால தாம்பத்ய வாழ்க்கையில முதல் இரவில் ஈடுபட முடியாது.ஒரு குழந்தைக்கு அப்பாவாகிற தகுதியை அவர் இழந்துட்டார்” என்றார் டாக்டர். 

-பாலா சரவணன்
படங்கள்-ம.செ.

15 Responses to “கதை| கதைகள்| சிறுகதை| சிறுகதைகள்”

suryajeeva said...
17 October 2011 at 21:46

கருத்து சரி தான், கடவுளின் தண்டனை என்பது கொஞ்சம் இடிக்கிறது


மழை said...
17 October 2011 at 22:15

நீங்கள் சொல்வதும் சரிதான்..
நன்றி வரவுக்கும்,கருத்துக்கும்:)


Ramani said...
18 October 2011 at 05:34

சிறுகதை வடிவில் ஒரு அழகிய கவிதை
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்


அம்பலத்தார் said...
18 October 2011 at 19:04

படிப்பினையூட்டும் நல்லதொரு குறுங்கதை.


மழை said...
18 October 2011 at 19:05

நன்றி ரமணி சார்:)


மழை said...
18 October 2011 at 19:07

நன்றி அம்பலத்தார். நாம ரெண்டு பேரும் ஒரே நிமிடத்தில் கமெண்ட் போட்டு இருக்கோம்.எனது முந்தைய கமெண்ட்.


மனோ சாமிநாதன் said...
21 October 2011 at 13:27

சுருக்கமான அழகிய சிறுகதை! ரசிக்கத்தகுந்த கதையை அளித்ததற்கு நன்றி! கதையும் படமும் யாருடைய ஆக்கங்கள் என்பதைக் குறிப்பிட்டிருக்கலாமே?


மழை said...
21 October 2011 at 18:24

குறிப்பிட்டாச்சு ! வருகை தந்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்:)


சிவகுமாரன் said...
22 October 2011 at 00:26

நல்ல (?) முடிவு.


மழை said...
23 October 2011 at 22:58

:)


pratheep said...
2 February 2012 at 19:26

nalla karuthu saravanan


sabari'sh said...
13 April 2012 at 01:39

saravanan nalla theme aana kadasiya padikiravangala innum konjam feel pana vechirukkalamnu thonuthu.. neenga kodutha mudivu sari than aanalum kadavul thandanayo endru yosikka vaikirathu, oru velai padikiravanga kadavul kodutha thandanai endru yeaduthukitangana athu mooda nambikkai aaidum...


NFPE Sivaganga said...
15 September 2012 at 16:26 This comment has been removed by the author.

P.P.S.Pandian said...
15 September 2012 at 16:28

The punishment for those who deceive and cheat the women should be like this only not from God as you say but from law to castrate such devils ..P.Sermuga pandian


Bass Baskar said...
2 October 2014 at 15:16

நல்ல ஒரு கருத்து நிறைந்து உள்ளது.


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News