Monday, 12 September 2011

உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ-Uyirai Tholaithen Song | Lyrics

உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ-Uyirai Tholaithen Adhu Unnil Thano Songs and Lyrics திலிப் வர்மன் பாடல்-Dhilip Varman Songs

Dhilip varman-திலீப் வர்மன்
திலீப் வர்மன் மலேசிய பாடகர். அழகிய குரலுக்கு சொந்தக்காரர்.மனதை நெகிழவைக்கும் அற்புதமான பாடல்களின் படைப்பாளி.இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவரின் உயிரை தொலைத்தேன் பாடலை முதன்முறையாக கேட்டபோதே ”என்னமோ ஏதோ செய்து விட்டார்

 நேரம் கிடைக்கும்போதெல்லாம் இவருடைய உயிரை தொலைத்தேன்,அன்பே சகியே,கனவெல்லாம் நீதானே போன்ற பாடல்கள் காதுகளில் தேனாய் ”இனிக்கும்

இப்பாடலை ஏற்கனவே கேட்டிருந்தால் மிக்க மகிழ்ச்சி.கேட்காதவர்கள் தவறாமல் கேளுங்கள். நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.



மேலும் இவரைப்பற்றி:

பெயர்: திலீப் வர்மன்
ஊர் :   பினாங்க்(மலேசியா)
பிறந்த தேதி: ஏப்ரல் 28
தொழில்:  பாடகர் மற்றும் இசையமைப்பாளர்.
வலைத்தளம்: http://www.dhilipvarman.co.nr/
முகநூலில்:     http://www.facebook.com/pages/Dhilip-Varman/101497519892899

2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த மலேசிய பாடகருக்கான ("Best Male Vocalist")விருதை வென்றார்.THR Raaga மலேசிய வானொலியில் நீண்ட நாட்கள் உயிரை தொலைத்தேன் பாடல் முதல் இடத்தை பிடித்து மலேசிய இசை ரசிகர்களை தன் இசையால் வசீகரித்தார்.


உயிரை தொலைத்தேன் பாடல் வரிகள்- Uyirai Tholaithen Lyrics

உயிரை தொலைத்தேன்..
அது உன்னில்தானோ..
இது நான் காணும் கனவோ நிஜமோ..
மீண்டும் உன்னை காணும் வரமே
வேண்டும் எனக்கே மனமே மனமே..
விழியில் விழுந்தால்.. ஆஆஆஆஆ..
என்னில் எனதாய் நானே இல்லை..
எண்ணம் முழுதும் நீதானே
என் கண்ணே..
(உயிரை..)

அன்பே உயிராய் தொடுவேன் உன்னை..
தாலாட்டுதே பார்வைகள்..
(அன்பே..)
உனை சேரும் நாளை..
தினம் ஏங்கினேனே..
நானிங்கு தனியாக அழுதேன்..
விடியும் வரை..
கனவின் நிலை..
உனதாய் இங்கு..
தினம் ஏங்குது..
மனம் உருகிடும்..
நிலை இது..
எந்தன் முதல் முதல் வரும்..
உயிர் காதலில்..
(உயிரை..)

நினைத்தால் இனிக்கும் இளமை நதியே..
உன்னோடு நான் மூழ்கினேன்..
(நினைத்தால்..)
தேடாத நிலையில்..
நோகாத வழியில்..
கண் பார்க்கும் இடம் எங்கும் நீதான்..
(விடியும்…)
(உயிரை..)
ஓஓஓஓஓ..

1 Responses to “உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ-Uyirai Tholaithen Song | Lyrics”

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

Post a Comment

All Rights Reserved மழை |
Sponsored by மழை