Thursday, 22 September 2011

ஆதலினால் காதல் செய்வோம்-தமிழ் கவிதைகள்

Tamil Kavithaigal-தமிழ் கவிதைகள்


tamil kavithaigal kavithaikal photos images

ஆதலினால் காதல் செய்வோம்

காதல்- 
இது கண்களால் விற்கப்படும் 
கஞ்சாத்தூள். 

 காதல்- 
ஒரு பக்கம் பூக்கள் 
மறுபக்கம் முட்கள் 
விதி கட்டி வைத்துள்ள 
விசித்திர மாலை. 

 தேனொரு பக்கம் 
விஷமொரு பக்கம் 
சேர்ந்து வழிகிற 
செந்தாமரை.
                                                 

 சாமிகளையே பம்பரமாய் 
ஆட்டிப்படைத்த சாட்டை. 






வேண்டாமென்று 
 வெளியில் சொன்னாலும் 
மறைவாய் மனிதன் 
   விரும்பி அருந்தும் மது. 

 இளைய உள்ளங்களோடு 
 போராடவே 
மனம்தனின் பாசறையில் 
அமுதக்கட்டியில் தயாரிக்கப்பட்ட
 ஆயுதம். 

 கணக்கில்லா மனிதரின் 
கண்ணீர் லேகியத்தை குடித்து 
சாகாவரம் பெற்றுவிட்டது. 

 கண்களுக்கும் காதலுக்கும் 
ஒரே வயது.

யாராவது
கங்கையை வேரோடு பிடுங்கி எறியும்
 நாளில்...

எந்த விஞ்ஞானியாவது
பூமி கிண்ணத்திலிருந்து
காற்றை சுத்தமாக
கழுவி ஊற்றிவிடும் 
நாளில்...
மனிதனை விட்டு காதல்
மரித்துப்போகும்.

காதலை போற்றுவோம்
காதலை போற்றுவோம்

இது
சாதிமத பேதங்களை
சாகடிக்க
விழிகள் தயாரிக்கும்
விஷம் என்பதால்
காதலை போற்றுவோம்.

-கே.ஆர்.பாபு.

11 Responses to “ஆதலினால் காதல் செய்வோம்-தமிழ் கவிதைகள்”

Philosophy Prabhakaran said...
23 September 2011 at 02:56

// வேண்டாமென்று
வெளியில் சொன்னாலும்
மறைவாய் மனிதன்
விரும்பி அருந்தும் மது. //

அடேங்கப்பா...


ரேவா said...
23 September 2011 at 08:43

விழிகள் தயாரிக்கும்
விஷம் என்பதால்
காதலை போற்றுவோம்.

செம செம .....விஷம்னு தெரிஞ்சுமா காதலை போற்றனும்...ஹ ஹ சும்மா கேட்டேன்...


ரேவா said...
23 September 2011 at 08:44

காதல்-
ஒரு பக்கம் பூக்கள்
மறுபக்கம் முட்கள்
விதி கட்டி வைத்துள்ள
விசித்திர மாலை.

அழகான வரிகள் :)


ரேவா said...
23 September 2011 at 08:45

கணக்கில்லா மனிதரின்
கண்ணீர் லேகியத்தை குடித்து
சாகாவரம் பெற்றுவிட்டது.

உண்மைதான்...காதல் பற்றிய நல்ல கவிதை.....ஆதலினால் காதல் செய்வீர் :)


மழை said...
23 September 2011 at 18:26

நன்றி Philosophy:)
நல்வரவு


மழை said...
23 September 2011 at 18:27

நன்றி ரேவா:)
நல்வரவு.


raja said...
24 September 2011 at 10:52

migavum arumaiana unarvu poorva thathuvam


மழை said...
24 September 2011 at 19:07

Thanks Raja:) Welcome


azeem said...
13 January 2012 at 23:51

வேண்டாமென்று
வெளியில் சொன்னாலும்
மறைவாய் மனிதன்
விரும்பி அருந்தும் மது. unnmai


parhti zplus said...
22 January 2013 at 15:40

Tamil Kavithaikal, Tamil Poems, Festival Kavithaikal, Natural Kavithaikal. Find More Category Kavithaikal Pls Visit.http://www.valaitamil.com/literature_poem


Anonymous said...
13 February 2013 at 17:15

:) sema....ellame.... blog full ah super....
நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா:)
ithum super


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News