Saturday, 15 February 2014

மோடியும் கேடியின் பயமும்

கருத்துக்கனிப்புகளும் மக்களின் எண்ணமும் ஒன்றாக இருக்குமானால் மோடி பிரதமர் ஆகி விடுவார்.

உப்பு சப்பில்லாத இந்த காங்கிரஸ் ஆட்சியில் மக்களும் வெறுத்து போயிருக்கிறார்கள்.நமக்கும் வெட்கம்,மானம்,சூடு,சொரனை இருக்குன்னு உலகத்துக்கு நிருபிக்கனும்னா மோடி மாதிரியான ஒருவரே பிரதமர் பதவிக்கு சரியான தேர்வாக  இருப்பார்.

மோடி மீது சுமத்தப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு அவர் மதவாதி என்பதுதான்.இருக்கட்டுமே தாய்ப்பற்று,மதப்பற்று,தேசப்பற்று, எல்லாம் ஒரே வகையை சார்ந்தவைதானே!

மோடியிடம்  மதப்பற்று உண்டு,ஆனால் அவர் எந்த மதத்திற்கும் எதிரி இல்லை என்பதை நம் சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மோடி வெற்றிபெற்றால் அன்னிய முதலீடுகள் குறையும்,அமெரிக்கன் எதிரியாகி  விடுவான் என்பதெல்லாம் மோடிக்கு வேண்டாதவர்கள் சொல்லும் புரளிகள் .இந்தியா அதன் சுயசார்போடு,தன்னிச்சையாகவே வளர்ச்சி அடைய முடியும் என்பதற்கு குஜராத்தே சாட்சி.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெரும் பட்சத்தில் நாட்டின் மதிப்பும்,வளர்ச்சியும் அதிகரிக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.
எதிர்பார்ப்பை மோடி நிறைவேற்றுவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Sunday, 22 September 2013

மூஞ்சி மொகர - தமிழ் குறும்படம்

Moonji Mogara Tamil short film


Welcome to face department இப்படித்தான் ஆரம்பிக்கிறது பிரம்மாவின் வகுப்பு.
சொர்க்கலோகத்தில் பிரம்மா மனிதனை வித விதமாக படைக்கும்போது நிகழும் சுவாரஸ்யங்கள்,கலாய்ப்புகள்-தான் இக்குறும்படத்தின் கதை.

பல நூறு கோடி மனிதர்கள் வாழும் பூலோகத்தில்,ஒரு மனிதனை அடையாளப்படுத்துவது அவன் முகம் மட்டுமே.அப்படிப்பட்ட தனித்துவம் மிக்க முகங்களை வடிவமைப்பது என்பது உண்மையாகவே பிரம்மாவுக்கு பெரிய சவாலான விசயம்தான்.

பிரம்மா தன் முக தொழிற்சாலை(Face department) ஊழியர்களுக்கு சில கட்டளைகளை இடுகிறார்.

அது 3V
             V=VARIETY
             V=VITHYAASAM
             V=VERY GOOD
நிறம் கருப்பாகவோ,வெள்ளையாகவோ,பச்சையாகவோ இருக்கலாம்.(இதில் பச்சை முகத்தில் சிலருக்கு தெரியும் நரம்பாகவோ,இல்லை வ்ர்ணத்தை கலப்பதற்காகவோ என நானே நினைத்து கொண்டேன்)

ப்ராஜக்ட்-ற்கான நேரம் முடிந்த பின் பிரம்மா தன் வடிவமைப்பாளர்களை ஒருவர் பின் ஒருவராக சமர்ப்பிக்க சொல்கிறார்.

வடிவமைப்பாளர்கள் பல்ர் சொதப்ப,சிலர் மட்டும் நம்ம கேப்டன் டோனியின் முகம்,திருடர்கள் முகம் என வடிவமைப்பில் அசத்தி பிரம்மாவின் பாராட்டை பெறுகிறார்கள்.

அதில் ஒருவன் எழுந்து பிரம்மாவிடம், கருப்பாக படைக்கப்பட்ட ஒரு முகம் பின் வெள்ளையாக மாற வாய்ப்புள்ளதா? என கேட்கிறான்.அதற்கு பிரம்மா...
வாய்ப்பே இல்லை என்கிறார்.

 நம் மைக்கேல் ஜாக்சன் நிழற்படத்தை காண்பித்து வாய்ப்பு இருக்கிறது என்கிறார் அந்த வடிவமைப்பாளர்.கருப்பாக படைக்கப்பட்ட இவர் பின் பூலோகத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரி மூலம் வெள்ளையாக மாறினார் என்பதை கேட்ட பிரம்மா வியப்பில் வாய்பிளக்கிறார்.

FEMALE PROJECT பன்ன யாரெல்லாம் ரெடி? என பிரம்மா கேட்க,

அனைவரும் கைதூக்க ஒருவன் மட்டும் விருப்பமில்லை என்கிறான்.
விளக்கம் கேட்கிறார் பிரம்மா...

பொண்ணுங்கனாளே கடுப்புத்தான்...சார்
எவ்ளோ அழகா படைக்கிறோமோ,அவ்ளோ ஆபத்து  என்கிறார் அந்த வடிவமைப்பாளர்.
இன்னொரு வடிவமைப்பாளரோ,பெண்ணை மிக அழகாக படைத்தால்,அப்பெண்ணையே மனைவியாக்கி கொள்ள தோன்றும் என்கிறார்.

எதுப்பா அழகு? பிரம்மா பதில்.


அன்னை தெரசாவின் நிழற்படத்தை காண்பித்து,ஏன் இவங்க அழகில்லையா? வாழ்ந்த வாழ்க்கைதான் அழகே தவிற, நீங்க சொல்ற எதுவும் அழகில்லை...என தத்துவம் பேசி குறும்படத்தை முடிக்கிறார் பிரம்மா...

ஸ்ரீஜித் சராங் எடிங்கில்,சுரேஷ் கோபி ஒளிப்பதிவு செய்து,ஜேக்ஸ் பிஜாய் பிண்ணனி இசையமைத்திருக்கிறார்.
ரூஃபினா ராஜன் தயாரிப்பில்,ஸ்டெப் அப் டான்ஸ் கம்பெனி இக்குறும்படத்தை வெளியிட்டு இருக்கிறது.

 நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில்  BEST FILM, BEST DIALOGUE and BEST CREW போன்ற விருதுகளையும் வென்றுள்ளது.
 நன்றி.


Friday, 20 September 2013

நெஞ்சில் இனிப்பவை - தாலாட்டும் பூங்காற்று நானல்லவா...

இளையராஜாவின் இன்னிசையில்,எஸ்.ஜானகியின் குரல் வளத்தில் தேனமுதமாய் ஒலிக்கிறது இப்பாடல்.ஒலியும்,ஒளியும் சேர்ந்து நம்மை பரவசத்தில் ஆழ்த்துகிறது.

நள்ளிரவில் நான் கண்விழித்தேன்
உன் நினைவில் நான் மெய்சிலிர்த்தேன்..
பஞ்சணையில் நீ முள்விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்...

Saturday, 25 May 2013

நம் தினசரி வரவு செலவு கணக்குகளை கையாள ஆண்ட்ராய்ட் தரும் அசத்தல்  அப்ளிகேசன் 

செலவு கணக்குகள் பார்க்க ஒரு குயர், கோடு போட்ட நோட்டு வாங்கி எழுதிய
காலமெல்லாம் மலையேறி விட்டது.பிரிவு வாரியாகவோ, நம் விருப்பபடியோ சுலபமாக
கணக்குகளை மாற்றி அமைக்கலாம்.

மாதம் முடிந்தவுடன், முந்தைய மாதத்துடன் ஒப்பிட்டும் பார்க்கலாம்.பயன்படுத்தி பாருங்கள்
பயணுள்ளதாக இருக்கும்.

Saturday, 18 May 2013

ஆண்ட்ராய்டில் YOU TUBE காணொளிகளை தரவிறக்கம் செய்ய சிறந்த அப்ளிகேசன்.

யூ ட்யூப் காணொளிகளை தறவிறக்கம் செய்ய application-களை Play store ல் தேடினால் கிடைக்காது.ஏனெனில் கூகிள் ஏற்கனவே இதுபோன்ற ஆப்ஸ்-களை தடைசெய்துள்ளது.

சரி மாற்று வழியை பார்ப்போம்...

1.முதலில் உங்கள் ஆண்ட்ராய்டில் setting ற்கு செல்லுங்கள்.
அதில் security யை க்ளிக் செய்யுங்கள்.2.பிறகு unknown sources என்பதை தேர்வு செய்யுங்கள்.3.அடுத்து www.tubemate.net என்ற வலைதளத்திற்கு செல்லுங்கள்.

அதில் DOWNLOAD (android freeware) என்பதை க்ளிக் செய்யுங்கள்.4.பின் இனைப்பானது தரவிறக்க தளத்திற்கு செல்லும்5.இன்ஸ்டால் என்பதை சொடுக்கி நிறுவி,திறந்திடுங்கள்.6.மேலுள்ள படத்தில் பச்சை  நிற  அம்புகுறி உள்ளதள்ளவா அதை சொடுக்கி உங்களுக்கு தேவையான அளவுகளிள்,பார்மட்களில் தரவிறக்கி கொள்ளுங்கள்.
இப்பதிவை அன்ட்ராய்ட் 4.1 வெர்சன் மொபைலில் இருந்து பதிவதால் சில பிழைகள் இருக்கலாம்.மன்னிக்கவும்
நன்றி.
சந்தேகம் இருந்தால் கேட்கவும்.